MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • அந்நியனாக இருந்த தம்பிகளை ரெமோவாக மாற்றிய ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்

அந்நியனாக இருந்த தம்பிகளை ரெமோவாக மாற்றிய ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் ப்ளான்படி கதிர் மற்றும் ஞானம் இருவரும் தங்கள் மனைவிகளிடம் நல்லவன் போல் நடிக்க ஆரம்பித்துள்ளனர். இதன்பின் என்ன ஆகிறது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 24 2026, 08:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Ethirneechal thodargiradhu serial
Image Credit : youtube/suntv

Ethirneechal thodargiradhu serial

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தன் தம்பிகளுடன் சேர்ந்து புது பிளான் ஒன்றை போட்டுள்ள ஆதி குணசேகரன் அவர்கள் இருவரிடமும் தங்கள் மனைவிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி இருக்கிறார். அதில் முதல் படியாக கதிரை வைத்து அறிவுக்கரசியை அந்த வீட்டை விட்டு வெளியே துரத்தி இருக்கிறார்கள். கதிர் ரூமை விட்டு வெளியே போக சொன்னதும் அறிவுக்கரசி விறுவிறுவென சென்று தன் பேக்கை எடுத்துக்கொண்டு வெளியேறினார். தன்னை வெளியே துரத்தி விட்ட கோபத்தில் இருக்கும் அறிவுக்கரசி அவர்களை சும்மா விடமாட்டேன் என்று கூறியபடி கேட்டினருகே முல்லையுடன் அமர்ந்திருக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
கதிர் போட்ட உத்தரவு
Image Credit : youtube/suntv

கதிர் போட்ட உத்தரவு

ஆதி குணசேகரன் சாப்பிடாமல் இருந்ததால் அவருக்கான சாப்பாடு அவரது ரூமிலேயே சென்று கொடுத்துள்ளார் நந்தினி. அப்போது அவரிடம் மிகவும் பணிவாக பேசி இருக்கிறார் ஆதி குணசேகரன். இதை பார்த்து ஷாக்கான நந்தினி இவரா இப்படி பேசுகிறார் என தன் தங்கைகளிடம் வந்து கூறுகிறார். பின்னர் அனைவரும் படுக்க சென்ற நிலையில், கதிர் ஹாலில் வந்து பார்க்க அப்போது அங்கு கரிகாலன் மட்டும் இருக்கிறார். அவர் கதிரிடம் வெளியே அறிவுக்கரசி மற்றும் முல்லை குளிரில் நடுங்கியபடி இருக்கிறார்கள் அவர்களை உள்ளே அழைத்து வருமாறு சொல்ல, அதைக் கேட்டு கோபமடைந்த கதிர், ஒழுங்கு மரியாதையா போயிடு காலையில எழுந்து வந்து பார்க்கும்போது எவனும் இருக்கக் கூடாது என சொல்லிவிட்டு ரூமுக்குள் செல்கிறார்.

Related Articles

Related image1
வெளிய போடி... அறிவுக்கரசியை அடிச்சு துரத்திவிட்ட கதிர் - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் எதிர்பாரா திருப்பம்
Related image2
குணசேகரனின் அடுத்த டார்கெட் ஜனனியின் குழந்தையா? நடக்கும் தீவிர ஆலோசனை - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
35
நந்தினியிடம் பாச மழை பொழியும் கதிர்
Image Credit : youtube/suntv

நந்தினியிடம் பாச மழை பொழியும் கதிர்

கதிரின் இந்த திடீர் ட்ரான்ஸ்பர்மேஷனை உண்மை என நம்பி அவரது ரூமிலேயே படுக்க செல்கிறார் நந்தினி. அப்போது இருவரும் பேசிக் கொள்கிறார்கள். கதிர் கட்டிலில் அமர்ந்திருக்க தயக்கத்துடன் ரூமில் நின்று கொண்டிருக்கும் நந்தினியிடம் நம்ம ஒண்ணா இருக்கணும் என நினைக்கிறேன் என்று கதிர் சொல்ல, அதைக் கேட்டு ஷாக்காகவும் நந்தினி, ஒண்ணா இருக்கணும்னா என்ன அர்த்தம் என கேட்கிறார். அதற்குக் கதிர் நாம் மீண்டும் புருஷன் பொண்டாட்டியா வாழனும் என சொல்கிறார். ஏற்கனவே கதிரை நம்பி பலமுறை ஏமாந்த நந்தினி, இந்த முறையும் அவர் விரித்துள்ள பாச வலையில் சிக்குவார் என்று தான் தோன்றுகிறது.

45
ஃபீல் பண்ணி பேசிய ஞானம்
Image Credit : youtube/suntv

ஃபீல் பண்ணி பேசிய ஞானம்

மறுபுறம் ஞானமும் தன்னுடைய மனைவி ரேணுகா உடன் ரூமில் மனம் விட்டு பேசுகிறார். உன் வாழ்க்கையும் முக்கியம், நம்ம வாழ்க்கையும் முக்கியம். அதனால்தான் நான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன் என சென்டிமென்டாக பேசி லாக் செய்கிறார் ஞானம். இனி நம்முடைய மகளுடன் இந்த வீட்டிலேயே நாம் ஒன்றாக வாழலாம் என்றும் கூறுகிறார். உன்னுடைய அம்மா வீட்டில் இருக்கும் ஐஸ்வர்யாவை போன் போட்டு இங்கே வர சொல் என்றும் கூறியிருக்கிறார் ஞானம். அவரின் இந்த பேச்சை ரேணுகாவும் நம்ப வாய்ப்பு இருக்கிறது. அவனுங்க சொல்றபடி கேட்டு நடக்குமாறு விசாலாட்சி சொல்லி இருப்பதால் ரேணுகாவும் ஞானத்தின் பாச வலையில் சிக்க போகிறார் என்பது உறுதியாக தெரிகிறது.

55
அடுத்த பிளான் என்ன?
Image Credit : youtube/suntv

அடுத்த பிளான் என்ன?

தான் சொன்னது படி தம்பிகள் அந்நியன் மோடில் இருந்து ரெமோவாக மாறி தங்கள் மனைவிகளிடம் பாச மழை பொழிந்து வருவதை அறிந்த ஆதி குணசேகரன் அடுத்து என்ன செய்யலாம் என பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார். மறுபுறம் தங்களை வீட்டை விட்டு துரத்தி விட்ட ஆதி குணசேகரனை எப்படி பழி வாங்குவது என தூங்காமல் யோசித்துக் கொண்டிருக்கிறார் அறிவுக்கரசி. இதை எடுத்து என்ன நடந்தது? கதிர் மற்றும் ஞானம் மீது ரேணுகாவும் நந்தினியும் சந்தேகப்பட்டார்களா? இல்லை அவர்களை ஏற்றுக் கொண்டார்களா? அறிவுக்கரசி அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பதை இனிவரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எதிர் நீச்சல் தொடர்கிறது.

Latest Videos
Recommended Stories
Recommended image1
கார்த்திகை தீபம் அப்டேட்: அம்மாவுக்காக கருவை கலைக்கத் துணிந்த ரோகிணி! கார்த்திக்கிடம் சிக்கிய உண்மை - விறுவிறுப்பான எபிசோட்!
Recommended image2
மகனுக்காக சொத்தை உதறிய செல்வநாயகி! தனிமையில் வாடும் சத்யா - விறுவிறுப்பான எபிசோட்!
Recommended image3
என் மகனை நெருங்காதே! - ஆனந்தியை எதிர்க்கும் அன்புவின் அம்மா! அக்காவுக்காக ஆனந்தி எடுத்த விபரீத முடிவு.. சிங்கப் பெண்ணே ஹைலைட்ஸ்!
Related Stories
Recommended image1
வெளிய போடி... அறிவுக்கரசியை அடிச்சு துரத்திவிட்ட கதிர் - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் எதிர்பாரா திருப்பம்
Recommended image2
குணசேகரனின் அடுத்த டார்கெட் ஜனனியின் குழந்தையா? நடக்கும் தீவிர ஆலோசனை - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved