MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • வெளிய போடி... அறிவுக்கரசியை அடிச்சு துரத்திவிட்ட கதிர் - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் எதிர்பாரா திருப்பம்

வெளிய போடி... அறிவுக்கரசியை அடிச்சு துரத்திவிட்ட கதிர் - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் எதிர்பாரா திருப்பம்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தன்னுடைய மகளுக்காக அறிவுக்கரசியை ரூமை விட்டு வெளியே அனுப்பி இருக்கிறார் கதிர்வேலன். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 23 2026, 10:11 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Ethirneechal Thodargiradhu Serial
Image Credit : youtube/suntv

Ethirneechal Thodargiradhu Serial

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரிந்ததும் பெண்களெல்லாம் குஷியாக இருக்க, மறுபுறம் ஆதி குணசேகரன் தன்னுடைய தம்பிகளோடு தீவிர ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார். அதில் கதிர் மற்றும் ஞானத்திடம் அவர்கள் இருவரையும் மீண்டும் தங்களுடைய மனைவிகளுடன் இணக்கமாக இருக்கச் சொல்லும் அவர், அவர்களை உங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார். அவர்களும் அதற்கு தலையாட்டி உள்ளனர். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
ரூமுக்காக வெடிக்கும் பிரச்சனை
Image Credit : youtube/suntv

ரூமுக்காக வெடிக்கும் பிரச்சனை

வீட்டுக்குள் சென்ற கதிர், தன் மகள் தாராவை நீ ரூமுக்கு சென்று படி என்று சொல்ல, என்னை தான் அந்த ரூமுக்குள்ளேயே போகக் கூடாதுன்னு சொல்லி வச்சிருக்காங்களே என சொல்ல, யார் அப்படி சொன்னா என கதிர் கேட்க, தாரா, அறிவுக்கரசியை பார்க்கிறார். உடனே அறிவுக்கரசி, நான் தான் சொன்னேன். அது என்னோட ரூம், உள்ள வரக்கூடாதுன்னு சொல்லி வச்சிருக்கேன் என கூற, இனிமே அது உன்னோட ரூம் தான் நீ உள்ள போ தாரா என கதிர் சொல்கிறார். இதைக்கேட்டு கொந்தளித்த அறிவுக்கரசி, என்ன நினைச்சிட்டு இருக்கீங்க, நீங்க தான அவங்க எல்லாத்தையும் மேல இருந்து கீழ வரக்கூடாதுன்னு சொன்னீங்க, இப்போ இப்படி மாத்தி பேசுறீங்க என கேட்கிறார்.

Related Articles

Related image1
ஜனனிக்கு வந்த பயம்... மகன்களுக்கு ஆப்பு வைத்த விசாலாட்சி - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்
Related image2
குணசேகரனின் அடுத்த டார்கெட் ஜனனியின் குழந்தையா? நடக்கும் தீவிர ஆலோசனை - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
35
ஷாக் ஆகும் நந்தினி
Image Credit : youtube/suntv

ஷாக் ஆகும் நந்தினி

விட்டா, உன்னோட பொண்டாட்டியையும் அந்த ரூம்லயே தங்க சொல்லுவ போல, என அறிவுக்கரசி சொன்னதும், ஆமா இனிமே அது என்னோட ரூம், என்னோட குடும்பம் தான் அதில் தங்கும் என கதிர் சொல்ல அனைவரும் ஷாக் ஆகிறார்கள். அப்போது சவுண்டு விட்ட அறிவுக்கரசியை சும்மா இரும்மா என சொல்லி ஆஃப் பண்ணிவிடுகிறார் ஆதி குணசேகரன். இனிமே எந்தவித சண்டை சச்சரவுகள் இல்லாமல் நிம்மதியா வாழலாம் என ஆதி குணசேகரன் சொன்னதைக் கேட்டு பெண்கள் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இவரா இப்படி பேசுகிறார் என அறிவுக்கரசியும் ஷாக் ஆகிறார்.

45
வீட்டை விட்டு வெளியேறும் அறிவுக்கரசி
Image Credit : youtube/suntv

வீட்டை விட்டு வெளியேறும் அறிவுக்கரசி

இதையடுத்து தன்னால் அந்த ரூமை விட்டுக் கொடுக்க முடியாது என சொல்லும் அறிவுக்கரசி, உன் மகளை டைரியை மட்டும் எடுத்துட்டு வெளிய போகச் சொல்லு என கூற, ஏய் யாருடி நீ என கதிர் கேட்கிறார். மாமா மாமானு உருகி வந்த கதிரா இப்படி கேட்கிறார் என அறிவுக்கரசி மனமுடைந்து போகிறார். பின்னர் அவரை வீட்டை விட்டு வெளியே போகச் சொல்கிறார் கதிர். இதையடுத்து வீட்டை விட்டு வெளியே வந்து கேட் அருகே அமர்ந்து கொண்டு தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார் அறிவுக்கரசி.

55
கலாய்க்கும் நந்தினி
Image Credit : youtube/suntv

கலாய்க்கும் நந்தினி

நான் ஒன்னும் அவ்வளவு சாதாரணமா இந்த வீட்டை விட்டு போக மாட்டேன். நான் யாருன்னு இவனுங்களுக்கு காட்டிட்டு தான் மறுவேலை பார்ப்பேன் என சவால்விடுகிறார். ஆதி குணசேகரனின் இந்த எதிர்பாரா மாற்றம் பற்றி மாடியில் கூடி அமர்ந்து பேசுகிறார் நந்தினி. அப்போது விசாலாட்சியிடம் உங்க மூத்த மகனுக்கு நான் சாந்த சொரூபன்னு பேர் வைக்க போறேன் என சொல்கிறார். 2026 அவரை இப்படி மாத்தும்னு நான் நினைச்சு பார்க்கல என கூறுகிறார். இதையடுத்து என்ன நடக்கப் போகிறது? மீண்டும் நந்தினியை தன் பக்கம் இழுக்க நினைக்கும் கதிரின் பிளான் ஒர்க் அவுட் ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எதிர் நீச்சல் தொடர்கிறது.

Latest Videos
Recommended Stories
Recommended image1
காத்திருக்கும் வானதி வீட்டார்... காணாமல் போன பாண்டியன் - அய்யனார் துணை சீரியலில் அடிபொலி ட்விஸ்ட்
Recommended image2
வீட்டை விட்டு விரட்டப்படும் மீனா... விஜயா பிளான் சக்சஸ் - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்
Recommended image3
யாருக்கும் தெரியாமல் பிளான் பண்ணிய கார்த்திக் – ஷாக்கான சந்திரகலா; கார்த்திகை தீபம் சீரியல்!
Related Stories
Recommended image1
ஜனனிக்கு வந்த பயம்... மகன்களுக்கு ஆப்பு வைத்த விசாலாட்சி - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்
Recommended image2
குணசேகரனின் அடுத்த டார்கெட் ஜனனியின் குழந்தையா? நடக்கும் தீவிர ஆலோசனை - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved