MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • ஜனனிக்கு வந்த பயம்... மகன்களுக்கு ஆப்பு வைத்த விசாலாட்சி - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்

ஜனனிக்கு வந்த பயம்... மகன்களுக்கு ஆப்பு வைத்த விசாலாட்சி - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் சொன்னபடி திதி கொடுத்து முடித்த விசாலாட்சி, அவருக்கு உத்தரவு ஒன்றை போட்டிருக்கிறார். அதைப்பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 20 2026, 10:14 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Ethirneechal Thodargiradhu Serial Today Episode
Image Credit : youtube/suntv

Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி முத்துவின் ஆத்மா சாந்தி அடையாததால் தான் வீட்டில் அடுத்தடுத்து பிரச்சனைகள் வருவதாகவும், அவருக்கு திதி கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும் என ஜோசியர் சொன்னதை அடுத்து, குடும்பத்தோடு திதி கொடுக்க ஏற்பாடுகள் நடைபெற்றது. இதற்காக இராமேஸ்வரத்தில் இருந்து மண் எடுத்து வந்து வீட்டிலேயே முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். இந்த நிகழ்வுக்கு இடையே ஜனனி, பாதியில் எழுந்து சென்று வாந்தி எடுத்தார். அதன் பின்னர் தான் அவர் கர்ப்பமாக இருப்பது உறுதியானது. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
பயப்படும் ஜனனி
Image Credit : youtube/suntv

பயப்படும் ஜனனி

ஜனனி கர்ப்பமாக இருக்கும் விஷயம் உறுதியானதை அடுத்து விசாலாட்சி மட்டற்ற மகிழ்ச்சி அடைந்ததோடு, உன் குழந்தையை நான் தான் வளர்ப்பேன் என்று கண்டிஷனும் போட்டிருக்கிறார். இதையடுத்து தனியாக சக்தியுடன் ரூமில் இருந்த ஜனனி, அவரிடம் தனக்கு பயமாக இருப்பதாக கூறுகிறார். நம்மால் நம்முடைய குழந்தையை நல்லா பாத்துக்க முடியுமா என ஃபீல் பண்ணி பேசுகிறார். அதற்கு சக்தி, நம்மகூட தான் நம்ம அம்மா, அண்ணிங்க எல்லாரும் இருக்காங்கல்ல அப்புறம் ஏன் பயப்படுற என சொல்லி ஜனனியை சமாதானப்படுத்துகிறார். இதையடுத்து சக்தியின் மடியிலேயே படுத்து தூங்குகிறார் ஜனனி.

Related Articles

Related image1
வீட்டுக்கு வந்த ஜனனிக்கு அதிர்ச்சி கொடுத்த ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்
Related image2
கர்ப்பமான ஜனனிக்கு இப்படி ஒரு பிரச்சனையா? டாக்டர் பேச்சைக்கேட்டு பதறிய சக்தி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
35
ரெடியான சாப்பாடு
Image Credit : youtube/suntv

ரெடியான சாப்பாடு

மறுபுறம் திதி கொடுக்கும் பூஜை முடிந்ததை அடுத்து, அனைவருக்கும் சாப்பாடு தயாராக இருக்கிறது. முதலில் காகத்திற்கு சாப்பாடு வைத்திருக்கிறார்கள். அதை காகங்கள் வந்து சாப்பிடுவதை பார்த்த கரிகாலன், மாமா காக்கா நல்லா சோறு சாப்பிடுது என சொல்ல, அருகில் இருந்த முல்லை, மிஸ்டர் கரிகாலன், அது காக்கா இல்ல, இவங்களோட முன்னோர்கள் என சொல்லி கலாய்க்கிறார். திதி பூஜைக்கு பின்னர் வீட்டு மருமகள்களுக்கு ஆண்கள் பரிமாற வேண்டும் என பூசாரி சொல்லிச் சென்றிருக்கிறார். இதனை செய்யாமல் கதிர், ஞானம் ஆகியோர் வெளியே அமர்ந்திருக்கிறார்கள்.

45
மகன்களை பரிமாற அழைக்கும் விசாலாட்சி
Image Credit : youtube/suntv

மகன்களை பரிமாற அழைக்கும் விசாலாட்சி

அப்போது டைனிங் டேபிளில் இருக்கும் விசாலாட்சி, நந்தினியிடம் வந்து இலை போட்டு அமரச் சொல்கிறார். உங்களுக்கு அவனுங்க வந்து பரிமாறுவாங்க என சொல்கிறார். அதற்கு நந்தினி, அவங்க சாப்பிடட்டும், நாங்க அப்புறமா சாப்பிடுறோம்னு சொல்ல, பேசாம இரு டி, இந்தாருங்க டா ஜோசியத்தை நம்புனா முழுசா நம்பணும், பூஜை பண்ணனும்னு சொன்னதை நாங்க நம்புனோம்ல, அப்போ இதையும் நீங்க செஞ்சுதான் ஆகணும். இதையடுத்து ரேணுகா, நந்தினி, பார்கவி ஆகியோர் இலையை போட்டு சாப்பிட உட்காருகிறார். அப்போது முதல் பந்தியிலேயே சாப்பிடுவது எவ்வளவு சந்தோஷம் தெரியுமா என கூறுகிறார் நந்தினி.

55
செல்ல மறுக்கும் மகன்கள்
Image Credit : youtube/suntv

செல்ல மறுக்கும் மகன்கள்

மாடியில் இருந்து ஜனனியையும் அழைத்து வர சொல்லி பார்கவியை அனுப்புகிறார். பார்கவி அங்கு சென்று பார்க்கையில் அவர் தூங்கிக் கொண்டிருக்க, சக்தி நாங்கள் அப்புறம் சாப்பிடுறோம் என சொல்லி அனுப்புகிறார். பார்கவியும் அதனை விசாலாட்சியிடம் சொல்லுகிறார். அப்போது வெளியே குத்துக்கல் போல அமர்ந்திருந்த ஆதி குணசேகரன், கதிர், ஞானம் ஆகியோரை உள்ளே அழைக்கும் விசாலாட்சி, வந்து சாப்பாடு பரிமாற சொல்கிறார். அவர்கள் நகராமல் அங்கேயே உட்கார்ந்து இருக்கிறார்கள். இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எதிர் நீச்சல் தொடர்கிறது.

Latest Videos
Recommended Stories
Recommended image1
கைமீறி சென்ற காதல்... வானதியின் தாய்மாமா எடுத்த அதிரடி முடிவு - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Recommended image2
மயில்வாகனத்திற்கு வந்த சோதனை! கையில் தட்டுடன் ஹோட்டலில் வேலை செய்யும் அவலம் - கார்த்திகை தீபம் லேட்டஸ்ட் அப்டேட்!
Recommended image3
Kayal Marumagal MahaSangamam: மீனாட்சி பிறந்தநாள் விழாவில் அரங்கேறும் பயங்கர சதி! ஆனந்தி, ரோகிணியின் முகத்திரையை கிழிப்பாரா கயல்?
Related Stories
Recommended image1
வீட்டுக்கு வந்த ஜனனிக்கு அதிர்ச்சி கொடுத்த ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்
Recommended image2
கர்ப்பமான ஜனனிக்கு இப்படி ஒரு பிரச்சனையா? டாக்டர் பேச்சைக்கேட்டு பதறிய சக்தி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved