MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • வீட்டுக்கு வந்த ஜனனிக்கு அதிர்ச்சி கொடுத்த ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்

வீட்டுக்கு வந்த ஜனனிக்கு அதிர்ச்சி கொடுத்த ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தேவசகாயத்திடம் இருந்து போலீசாரால் மீட்கப்பட்ட ஜனனி தற்போது வீட்டுக்கு திரும்பி இருக்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 18 2026, 08:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Ethirneechal Thodargiradhu Serial Today Episode
Image Credit : youtube/suntv

Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அடுத்தடுத்து பல்வேறு ட்விஸ்டுகள் அரங்கேறிய வண்ணம் உள்ளன. வீட்டில் அடுத்தடுத்து பிரச்சனைகள் வருவதை தடுக்க, அனைவரும் சேர்ந்து இராமேஸ்வரத்துக்கு சென்று தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுக்க வேண்டும் என்று ஜோதிடர் ஒருவர் கூறி இருக்கிறார். முதலில் இதற்கு பெண்கள் மறுப்பு தெரிவித்த நிலையில், பின்னர் ஜனனி மீட்கப்பட்ட விஷயம் தெரிந்ததும், இராமேஸ்வரம் செல்ல சம்மதம் தெரிவித்து இருக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார் குணசேகரன். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
வீட்டுக்குள் மாஸ் எண்ட்ரி கொடுக்கும் ஜனனி
Image Credit : youtube/suntv

வீட்டுக்குள் மாஸ் எண்ட்ரி கொடுக்கும் ஜனனி

திதி கொடுக்கப் போகும் முன்னர் ஆதி குணசேகரனின் அப்பா ஆதி முத்துவின் போட்டோவை எடுத்து வருகிறேன் என கூறிச் சென்ற கரிகாலன், யாரோ ஒரு பெரியவரின் போட்டோவை கொண்டு வந்து இவர் தான் ஆதி முத்து என சொல்ல, அனைவரும் ஷாக் ஆகிப் போகிறார்கள். பின்னர் மறுதினம் காலையில், வீட்டில் பூஜை செய்வதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தடபுடலாக நடக்கிறது. அனைவரும் குழுமி இருக்க அப்போது ஒரு கார் ஹாரன் சத்தம் கேட்கிறாது. யார் என்று தர்ஷினி எட்டிப்பார்க்கையில் ஜனனி வந்திருக்கிறார். அவரைப் பார்த்ததும் ஜனனி சித்தி வந்துட்டாங்க என தர்ஷினி கத்தி சொல்ல, பெண்கள் எல்லாம் உற்சாகம் பொங்க ஓடி வருகிறார்கள்.

Related Articles

Related image1
குணசேகரனின் பிளானில் மறைந்திருக்கும் மர்மம்... போலீசில் புகார் அளிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் தொடர்கிறது
Related image2
ஜனனி, மதிவதினியை கடத்தியது ராணாவா? புரியாத புதிராய் மாறிய தேவசகாயம் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
35
அட்வைஸ் பண்ணும் விசாலாட்சி
Image Credit : youtube/suntv

அட்வைஸ் பண்ணும் விசாலாட்சி

மறுபுறம் ஆதி குணசேகரன், கதிர், ஞானம், அறிவுக்கரசி ஆகியோர் ஜனனியின் வருகையால் பேரதிர்ச்சி அடைகிறார்கள். பின்னர் ஜனனியை சென்று வரவேற்கும் விசாலாட்சி, இப்ப தான் மனசு நிம்மதியா இருக்கு என ஃபீல் பண்ணி சொல்கிறார். அதுமட்டுமின்றி நீ உள்ளே வரும்போது அவங்க வம்பிழுத்து அதுல குளிர் காயணும்னு நினைச்சுக்கிட்டு இருக்காங்க. அவங்க என்ன சொன்னாலும் அதை செஞ்சிட்டு போயிடுவோம் என விசாலாட்சி சொல்ல, அதற்கு சம்மதம் தெரிவிக்கிறார் ஜனனி. பின்னர் அனைவரும் ஜனனியை வீட்டுக்குள் அழைத்து வருகிறார்கள். அப்போது ஆதி குணசேகரனை பார்த்து முறைக்கும் ஜனனி கோபத்தை அடக்கிக் கொண்டு நிற்கிறார்.

45
வம்பிழுக்கும் அறிவுக்கரசி
Image Credit : youtube/suntv

வம்பிழுக்கும் அறிவுக்கரசி

விசாலாட்சி சொன்னபடியே அறிவுக்கரசி ஜனனியை வம்பிழுக்கிறார். கைப்புள்ள எப்ப பாரு யார்கிட்டயாச்சும் வாயக் கொடுத்து அடி வாங்கிட்டு வந்திருது, இந்த வட்டம் அடி கொஞ்சம் ஓவர் போலயே என கிண்டலடிக்க, அவரிடம் எதுவும் பேசாமல் அமைதி காக்கிறார் ஜனனி. பின்னர் அறிவுக்கரசியிடம் சும்மா இருமா என சொல்லி அவரை ஆஃப் பண்ணுகிறார் ஆதி குணசேகரன். இதையடுத்து பூஜையை தொடங்கும் முன்னர், தான் அனைவருக்கும் புது டிரெஸ் வாங்கி வந்திருப்பதாக கூறி, அதையெல்லாம் ஜோடியாக வந்து வாங்கிக் கொள்ளும்படி கூறுகிறார் ஆதி குணசேகரன்.

55
ஆதி குணசேகரனிடம் புது டிரெஸ் வாங்கிய ஜனனி
Image Credit : youtube/suntv

ஆதி குணசேகரனிடம் புது டிரெஸ் வாங்கிய ஜனனி

முதலில் ஞானம், ரேணுகா வாங்கிக் கொள்ள, பின்னர் நந்தினியும் கதிரும் வாங்குகிறார்கள். அதன்பின்னர் ஜனனியையும் சக்தியை வரச் சொல்கிறார் குணசேகரன். ஜனனி அப்படியே நின்று கொண்டிருக்க, உன் தனிப்பட்ட விறுப்பு வெறுப்புகளை விட்டுட்டு வாங்கிக்கோமா என ஆதி குணசேகரன் சொல்ல, விசாலாட்சியும் ஜனனியை வாங்கிக் கொள்ள சொல்கிறார். அதன்பின்னரே சக்தியும், ஜனனியும் துணியை வாங்கிக் கொள்கிறார்கள். இதையடுத்து என்ன நடந்தது? இராமேஸ்வரம் சென்று எந்த பிரச்சனையும் இல்லாமல் திதி கொடுத்தார்களா? இல்லையா? என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எதிர் நீச்சல் தொடர்கிறது.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆனந்தியை அழிக்க அரவிந்த் போடும் ஸ்கெட்ச்! கோகிலாவுக்காகப் போராடும் சிங்கப்பெண் - சிங்கப்பெண்ணே மெகா ட்விஸ்ட்!
Recommended image2
கடந்த கால காயங்கள்! செல்லமே செல்லமே தொடரில் விஜி அழுததற்கான உண்மையான காரணம் என்ன? நெகிழ்ச்சியான எபிசோட்!
Recommended image3
மனைவியுடன் ஓடிப்பிடிச்சு விளையாடிய பிரபு; செம காண்டான சத்யா போடும் மாஸ்டர் பிளான் – மருமகள் சீரியல் டுவிஸ்ட்!
Related Stories
Recommended image1
குணசேகரனின் பிளானில் மறைந்திருக்கும் மர்மம்... போலீசில் புகார் அளிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் தொடர்கிறது
Recommended image2
ஜனனி, மதிவதினியை கடத்தியது ராணாவா? புரியாத புதிராய் மாறிய தேவசகாயம் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved