MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • குணசேகரனின் அடுத்த டார்கெட் ஜனனியின் குழந்தையா? நடக்கும் தீவிர ஆலோசனை - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்

குணசேகரனின் அடுத்த டார்கெட் ஜனனியின் குழந்தையா? நடக்கும் தீவிர ஆலோசனை - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி கர்ப்பமாக இருக்கும் நிலையில், அவருக்கு எதிராக தம்பிகளுடன் சேர்ந்து பிளான் போட்டுள்ளார் குணசேகரன். இதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 21 2026, 08:43 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ethirneechal Thodargiradhu Serial Today Episode
Image Credit : youtube/suntv

Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் எதிர்பாரா ட்விஸ்ட்களுடன் சென்று கொண்டிருக்கிறது. ஜனனி வீட்டுக்கு வந்ததும் ஆதி குணசேகரனை பழி வாங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து ஷாக் கொடுத்திருக்கிறார்கள். அது மட்டும் இன்றி வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் தங்கள் கணவன்மார்களுடன் ஜோடியாக சேர்ந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து முடித்துள்ளார்கள். இதன்பின் பெண்கள் தான் முதலில் சாப்பிட வேண்டும் என ஐயர் சொல்ல, அவர்களுக்கு சாப்பாடு பரிமாற வருமாறு கதிர் மற்றும் ஞானத்தை விசாலாட்சி அழைத்து இருந்தார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

24
திட்டு வாங்கும் கதிர்
Image Credit : youtube/suntv

திட்டு வாங்கும் கதிர்

விசாலாட்சி அழைத்தபோது வாய் திறக்காமல் இருந்த கதிர் மற்றும் ஞானம், தன் அண்ணன் ஆதி குணசேகரன் சொன்னதும் உள்ளே சென்று தங்கள் மனைவிக்கு சாப்பாடு பரிமாற போகிறார்கள். அப்போது நந்தினிக்கு சாப்பாடு பரிமாறும் கதிர் கோபத்தில் சுட சுட இருக்கும் சாதத்தை அவர் மேலே சிந்துகிறார். இதைப் பார்த்து கடுப்பான விசாலாட்சி, ஒழுங்கா பரிமாறுவதாக இருந்தால் பரிமாறு இல்லன்னா இங்க இருந்து போ என திட்டுகிறார். பின்னர் ஆதி குணசேகரன், டேய் கதிர் பொறுமையா பாருங்க என புத்திமதி சொல்ல, அதன் பின்னர் மெதுவாக சாதத்தை வைத்து நந்தினிக்கு சாப்பாடு பரிமாறுகிறார். மறுபுறம் ஞானம் ரேணுகாவுக்கு சாப்பாடு போடுகிறார்.

Related Articles

Related image1
ஜனனிக்கு வந்த பயம்... மகன்களுக்கு ஆப்பு வைத்த விசாலாட்சி - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்
Related image2
கர்ப்பமான ஜனனிக்கு இப்படி ஒரு பிரச்சனையா? டாக்டர் பேச்சைக்கேட்டு பதறிய சக்தி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
34
ஜனனியை எச்சரித்த டாக்டர்
Image Credit : youtube/suntv

ஜனனியை எச்சரித்த டாக்டர்

வீட்டில் சாப்பிட்டு முடித்த கையோடு ஜனனியை அழைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு செல்கிறார் சக்தி. அங்கு ஜனனிக்கு செக்கப் நடைபெறுகிறது. அவரை பரிசோதித்த டாக்டர் வயிற்றில் இருக்கும் குழந்தை நல்லா ஹெல்தியா இருக்கு எனக்கு கூறுகிறார். இதைக் கேட்ட ஜனனி மற்றும் சக்தி இருவருமே சந்தோஷப்படுகிறார்கள். ஆனால் அதன் பின் ஒரு குண்டையும் தூக்கி போட்டுள்ளார். அது என்னவென்றால் ஜனனியின் யூட்ரஸ் ரொம்ப வீக்காக இருப்பதாக கூறியுள்ளார். அது வீக்காக இருந்தால் வயிற்றில் வளரும் குழந்தையின் உயிருக்கே ஆபத்தாக அமையும் என்று கூறியுள்ளார். தான் கொடுக்கும் மாத்திரைகளை தவறாமல் சாப்பிடவும் அறிவுறுத்தி உள்ளார்.

44
பிளான் போடும் குணசேகரன்
Image Credit : youtube/suntv

பிளான் போடும் குணசேகரன்

ஜனனி கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரிந்ததிலிருந்து எதையோ யோசித்துக் கொண்டே இருந்த ஆதி குணசேகரன், அவர் ஆஸ்பத்திரிக்கு சென்ற பின்னர் தன் வீட்டின் வெளியே உள்ள கார்டனில் அமர்ந்திருக்க, அப்போது அங்கே வரும் கதிர் மற்றும் ஞானத்திடம் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் என சொல்கிறார். அது மிகவும் முக்கியமான விஷயம் என்பதால் அங்கிருந்த கரிகாலனை வீட்டுக்குள் போகச் சொல்கிறார். அனேகமாக கதிரை தூண்டிவிட்டு ஜனனி வயிற்றில் வளரும் கருவை கலைக்க ஆதி குணசேகரன் பிளான் போட்டிருக்க வாய்ப்பு உள்ளது. தம்பிகளுடன் சேர்ந்து அவர் என்ன திட்டம் தீட்டி இருக்கிறார் என்பது இனி வரும் எபிசோடுகளில் தெரிய வரும்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எதிர் நீச்சல் தொடர்கிறது.

Latest Videos
Recommended Stories
Recommended image1
கார்த்திக்கின் ஐடியாவை கேட்டு ஷாக்கான சந்திரகலா – ரோகிணி அண்ட் சாமுண்டீஸ்வரி சைலண்ட் – கார்த்திகை தீபம்!
Recommended image2
ஒரே நேரத்தில் இரண்டு கடத்தல்! கயல் மற்றும் ஆதிரை குடும்பத்திற்கு வந்த சோதனை! Kayal Marumagal மகா சங்கமத்தில் அரங்கேறும் பயங்கர சதி!
Recommended image3
TRP ரேஸில் சிறகடிக்க ஆசை சீரியலை ஓட ஓட விரட்டி புது வரலாறு படைத்த அய்யனார் துணை..!
Related Stories
Recommended image1
ஜனனிக்கு வந்த பயம்... மகன்களுக்கு ஆப்பு வைத்த விசாலாட்சி - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்
Recommended image2
கர்ப்பமான ஜனனிக்கு இப்படி ஒரு பிரச்சனையா? டாக்டர் பேச்சைக்கேட்டு பதறிய சக்தி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved