தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஆர்.மாதவன் "இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக நியமனம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது". 

தென்னிந்திய திரையுலகில் தொடர்ந்து தரமான படங்களை தேர்வு செய்து நடித்து வருபவர் நடிகர் மாதவன். அதே போல், கடந்த 2021 ஆம் ஆண்டு இவர் இயக்கி நடித்திருந்த 'ராக்கெட்ரி' திரைப்படம் தேசிய விருதையும் பெற்றது. தன்னுடைய முதல் இயக்கத்திலேயே சிறந்த இயக்குனர் என்பதை நடிகர் மாதவன் நிரூபித்த நிலையில், இவரது பெயர் மத்திய அரசின் புதிய பொறுப்புக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அதன் படி புனேவைச் சேர்ந்த இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் (FTII) தலைவராகவும், அதன் நிர்வாகக் குழுவின் தலைவராகவும் நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர் மாதவன் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாறுமாறா இருக்கே! ஜெயிலர் வெற்றி.. நெல்சனுக்கும் Porsche கார் கொடுத்து அசத்திய கலாநிதி மாறன்! இவ்வளவு விலையா?

இதுகுறித்து மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் X இல் இதுபற்றிய செய்தியைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது, தேசிய விருது பெற்ற "ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்" படத்திற்கும் வாழ்த்துக்கள். மேலும் தொலைக்காட்சி நிறுவனத்தின், தலைவராகவும், ஆளும் குழுவின் தலைவராகவும் பரிந்துரைக்கப்பட்ட நடிகர் மாதவன் ஜிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். இதை தொடர்ந்து நடிகர் மாதவனுக்கு வாழ்த்துக்கள் சமூக வலைதளத்தில் குவிந்த வண்ணம் உள்ளது.

தாறுமாறா இருக்கே! ஜெயிலர் வெற்றி.. நெல்சனுக்கும் Porsche கார் கொடுத்து அசத்திய கலாநிதி மாறன்! இவ்வளவு விலையா?