தாறுமாறா இருக்கே! ஜெயிலர் வெற்றி.. நெல்சனுக்கும் Porsche கார் கொடுத்து அசத்திய கலாநிதி மாறன்! இவ்வளவு விலையா?
'ஜெயிலர்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், இப்படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப் குமாருக்கு... செக் மற்றும் Porsche கார் பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக 2021 ஆம் ஆண்டு, இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான 'அண்ணாத்த' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதோடு, எதிர்பார்த்த வெற்றியையும் கைப்பற்றவில்லை. இதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் பல இயக்குனர்களிடம் தொடர்ந்து கதை கேட்டு வந்த நிலையில், அனைத்து கதையும் ஏற்கனவே நடித்தது போன்ற உணர்வை கொடுத்ததால் படம் நடிப்பதை தள்ளிப்போட்டு கொண்டே சென்றார்.
ஒருவழியாக இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் கூறிய 'ஜெயிலர்' படத்தின் கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்ததால், இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இதை தொடர்ந்து ஜெயிலர் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. அண்ணாத்த படத்தை தொடர்ந்து மீண்டும் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' படத்தை தயாரிக்க முன் வந்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம். பீஸ்ட் படத்தின் தோல்வி நெல்சன் திலீப் குமாருக்கு சிறு சறுக்கலை ஏற்படுத்திய நிலையில், ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடிப்பதில் உறுதியாக இருந்தார்.
மேலும் 'ஜெயிலர்' படமும், மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பில் உருவானது. இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்க, மிர்ணா, வசந்த் ரவி, யோகி பாபு சுனில், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மலையாள நடிகர் விநாயகன் அதிரடியான வில்லனாக கதாபாத்திரத்தில் நடித்து மிரள வைத்தார். அதேபோல் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷரீஃப், மலையாள நடிகர் மோகன்லால் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்திருந்தனர்.
லட்ச கணக்கான ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், உலகம் முழுவதும் சுமார் நான்காயிரம் திரையரங்குகளில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் வெளியானது முதலே தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. மூன்று வாரங்களை கடந்தும் பல திரையரங்குகளில் ரஜினி ரசிகர்களால் கொண்டாடப்பட்டுவரும் இந்த படம் இதுவரை சுமார் 600 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது.
அதிர்ச்சி... பிரபல இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!
இந்நிலையில் ஜெயிலர் படத்தின் வரலாற்று வெற்றியால் உச்சகட்ட சந்தோஷத்தில் இருக்கும் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து சுமார் 110 கோடி அவருடைய ஷேர் தொகையை கொடுத்தது மட்டும் இன்றி, பிஎம்டபிள்யூ கார் ஒன்றையும் பரிசாக கொடுத்தார். இதைத்தொடர்ந்து நெல்சனுக்கும் அவர் என்ன பரிசு கொடுப்பார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், சற்று முன்னர் நெல்சன் திலீப் குமாருக்கு, காசோலை கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த கலாநிதி... Porsche சொகுசு கார் ஒன்றையும் பரிசாக வழங்கியுள்ளார். இந்த காரின் விலை சுமார் 1கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. தற்போது இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.