கல்யாண பத்திரிகையில எதுக்கு பெயர் போடல.. ஆத்திரத்தில் தாத்தாவை கொன்ற பேரன்.. எப்படி தெரியுமா?

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டி ஊராட்சியில் உள்ள கரியாம்பட்டி சேர்ந்தவர் ஆச்சிமுத்து (78). விவசாயி. இவருக்கு 4 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். 

grandfather murdered grandsons in dindigul tvk

திருமண பத்திரிக்கையில் குடும்பத்தினர் பெயர் போடாத ஆத்திரத்தில் தாத்தாவை பேரன் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டி ஊராட்சியில் உள்ள கரியாம்பட்டி சேர்ந்தவர் ஆச்சிமுத்து (78). விவசாயி. இவருக்கு 4 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்நிலையில், 3வது மகன் காட்டுராஜா என்பவரின் மகளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. திருமண அழைப்பிதழ் அச்சிடப்பட்டு இதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வந்தன. 

இதையும் படிங்க;- 17 வயது சிறுவனை இதற்காக தான் கொன்றேன்! 5 துண்டாக வெட்டி கூறுபோட்ட பயங்கரம்.. ஆட்டோ டிரைவர் கைது.!

grandfather murdered grandsons in dindigul tvk

இந்நிலையில், திருமண அழைப்பிதழில் ஆச்சிமுத்துவின் முதல் மகன் பெயர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பெயர் இடம்பெறவில்லை. இதனால் நேற்று இரவு ஆச்சிமுத்துவின் பேரன் மருதை (27) என்பவர் குடிபோதையில் வந்து பெயர் அழைப்பிதழில் ஏன் இடம்பெறவில்லை என கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது தாத்தா ஆச்சிமுத்து எதுவாக இருந்தாலும் நீ உன் சித்தப்பாவிடம் போய் கேட்டு தெரிந்து கொள் என கூறியுள்ளார். 

இதையும் படிங்க;- மாமியாரை மடக்கிய மருமகன்! எவ்வளவு சொல்லியும் கேட்காத புருஷன்! அர்ச்சகருக்கு நடந்த ரத்த அபிஷேகம்! நடந்தது என்ன?

grandfather murdered grandsons in dindigul tvk

இதனால், ஆத்திரமடைந்த மருதை தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தாத்தா ஆச்சிமுத்துவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து பேரன் அங்கிருந்து தப்பித்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆச்சிமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

grandfather murdered grandsons in dindigul tvk

இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய மருதை போலீசார் கைது செய்துள்ளனர். திருமண பத்திரிக்கையில் பெயர் போடாத காரணத்தினால் தாத்தாவை பேரன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios