சமந்தாவும், விஜய் தேவரகொண்டாவும் கம்பேக் கொடுத்தார்களா? கடுப்பேற்றினார்களா? குஷி படத்தின் விமர்சனம் இதோ
சமந்தா, விஜய் தேவரகொண்டா கூட்டணியில் பான் இந்தியா படமாக வெளியாகி உள்ள குஷி படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் குஷி. இப்படத்தில் விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்திருக்கும் இத்திரைப்படத்தை மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தெலுங்கில் உருவான இப்படத்தை தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்துள்ளனர். குஷி திரைப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் 200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. சமந்தா, விஜய் தேவரகொண்டா இருவருக்குமே கடைசியாக நடித்த படங்கள் படுதோல்வி அடைந்ததால் குஷி படத்தை மலைபோல் நம்பி உள்ளனர். அப்படம் எப்படி இருக்கிறது என்பதை படம் பார்த்த ரசிகர்கள் டுவிட்டரில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... BiggBoss Tamil 7 : சம்பளத்தை டபுளாக உயர்த்தி ஹெவி அமௌண்ட்டை கேட்கும் கமல்.. எவ்வளவு தெரியுமா?
குஷி கிளீனான ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உள்ளது. சிம்பிளாக கதையாக இருந்தாலும் நிறைய இடங்களில் நகைச்சுவையாக இருக்கிறது. வழக்கமான ஸ்டோரி என்பதால் சில இடங்களில் படம் நீளமாக இருப்பதை போல தெரிகிறது. இருந்தாலும் காமெடி காட்சிகளும், கடைசி 30 நிமிடம் கிளைமாக்ஸில் எமோஷனல் காட்சிகள் நன்றாக ஒர்க் அவுட் ஆகி உள்ளது என பதிவிட்டுள்ளார்.
சமந்தா - விஜய் தேவரகொண்டா ஜோடி பார்க்க அருமையாக உள்ளது. இருவரும் நேர்த்தியாக நடித்துள்ளனர். சக நடிகர்கள் தேர்வும் நன்றாக இருக்கிறது. பாடல்கள் சூப்பர். காமெடி காட்சிகள் ஓகே ரகம் தான். பழைய கதை, கிரிஞ் காட்சிகள், எமோஷன் காட்சிகள் சுமாராக உள்ளது. இரண்டாம் பாதியில் பலமான மோதல் எதுவும் இல்லை. கிளைமாக்ஸ் நன்றாக உள்ளது. நீளமான படம் தான் ஆங்காங்கே காமெடியாக உள்ளது. மொத்தத்தில் ஆவரேஜ் என குறிப்பிட்டுள்ளார்.
அடுத்தடுத்து 3 தோல்விகள், 5 ஆண்டுகளுக்கு பின் குஷி மூலம் மிகப்பெரிய ஹிட் கொடுத்திருக்கிறார் விஜய் தேவரகொண்டா. ஷிவா நிர்வாணா மற்றும் சமந்தாவுக்கும் இது கம்பேக் படம் தான். இப்படம் நிச்சயம் 50 கோடி ஷேர் அள்ளும் என பதிவிட்டுள்ளார்.
சிறப்பாக எடுக்கப்பட்டுள்ள ஒரு குடும்ப படம் தான் குஷி. படம் முழுக்க கலகலப்பாக இருக்கும் வகையில் திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர் ஷிவா நிர்வாணா. நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு திருப்திகரமான படமாக குஷி அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
லண்டனில் குஷி திரைப்படம் பார்த்தேன். ஒற்றை வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் படம் பிளாக்பஸ்டர். விஜய் தேவரகொண்டாவுக்கும், சமந்தாவுக்கு கம்பேக் படமாக உள்ளது. ஒர்த்தாக உள்ளது என பாராட்டி பதிவிட்டு இருக்கிறார்.
குஷி படத்தின் முதல் பாதி நன்றாகவும், இரண்டாம் பாதி சூப்பராகவும் உள்ளது. சமந்தாவும், விஜய் தேவரகொண்டாவும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளனர். பாடல்கள் மற்றும் பின்னணி இசை அருமையாக உள்ளது. நல்ல கதை, ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பும் சிறப்பாக உள்ளது என குறிப்பிட்டு உள்ளார்.
மேற்கண்ட விமர்சனங்களை பார்த்தால் குஷி, சமந்தாவுக்கும், விஜய் தேவரகொண்டாவுக்கும் கம்பேக் படமாக அமைந்துள்ளது போல தெரிகிறது. இருப்பினும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் எந்த அளவுக்கு வசூலை அள்ளுகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... பெங்களூரு விசிட்.. தான் பிறந்த கிராமத்திற்கு சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - ஆசி பெற்று சென்ற ரசிகர்கள்!