பெங்களூரு விசிட்.. தான் பிறந்த கிராமத்திற்கு சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - ஆசி பெற்று சென்ற ரசிகர்கள்!
பெங்களூரு சென்றுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கிருஷ்ணகிரியில் உள்ள தான் பிறந்த கிராமத்திற்கு சென்று அங்கு உள்ள மக்களோடு புகைப்படம் எடுத்து மகிழ்ந்துள்ளார். பல ஆண்டுகள் கழித்து சூப்பர் ஸ்டார் அந்த கிராமத்திற்கு செல்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி உலக அளவில் பட்டையை கிளப்பி வருகிறது. சுமார் 550 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ள இந்த திரைப்படம், தமிழக அளவில் உலக நாயகன் கமல் அவர்களின் விக்ரம் திரைப்பட வசூல் சாதனையை முறியடித்துள்ளது.
21 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிவரும் ஜெயிலர் திரைப்படம் சுமார் 600 கோடி வசூலை எட்ட உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இமயமலையில் தனது பயணத்தை முடித்து, பல அரசியல் பிரபலங்களை சந்தித்து வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களாக தனது சொந்த மாநிலமான கர்நாடகாவில் பல இடங்களுக்கு சென்று வருகிறார்.
கல்யாணம் முடிந்த கையோடு ரசிகர்களுக்கு குட்நியூஸ் சொன்ன கவின் - குவியும் வாழ்த்துக்கள்
பல அரசியல் தலைவர்களை சந்தித்து சென்னை திரும்பிய அவர், அதன்பிறகு ஜெயிலர் படக் குழுவுடன் கேக் வெட்டி தனது பட வெற்றியை கொண்டாடினார். அதன் பிறகு அவருடைய 170வது திரைப்பட பூஜையில் கலந்துகொண்டு திடீரென பெங்களூரு சென்றார். அங்கு ஜெயநகரில் உள்ள பிஎம்டிசி பஸ் டெப்போவுக்கு சர்ப்ரைஸ் ஆக சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தான் கண்டக்டராக பணியாற்றிய நாட்களை நினைவு கூர்ந்து அங்கு தன்னுடன் வேலை பார்த்தவர்களை சந்தித்து மகிழ்ந்தார்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பிறந்த கிராமமான கிருஷ்ணகிரியில் உள்ள நாச்சிக்குப்பத்திற்கு முதல் முறையாக அவர் சென்றிருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அங்கு உள்ள ஓர் இடத்திற்கு சென்ற அவரைக் காண அவ்வூர் மக்கள் சிலர் அங்கு வந்திருந்தார், அவருடைய ரசிகர்கள் சிலர் அவரிடம் ஆசி பெற்றும் சென்றனர்.