கல்யாணம் முடிந்த கையோடு ரசிகர்களுக்கு குட்நியூஸ் சொன்ன கவின் - குவியும் வாழ்த்துக்கள்

டாடா படத்தின் வெற்றிக்கு பின்னர் திருமணம் செய்துகொண்ட கவின், தற்போது ரசிகர்களுக்கு குட் நியூஸ் ஒன்றை சொல்லி உள்ளார்.

Kavin Starrer Star movie Promo released as yuvan shankar raja birthday special gan

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வருகிறார் கவின். இவர் நடித்த டாடா திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. டாடா படத்தின் வெற்றிக்கு பின்னர் அடுத்த பட அறிவிப்பை கவின் எப்போது வெளியிடுவார் என காத்திருந்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக கடந்த ஆகஸ்ட் 20-ந் தேதி தன்னுடைய நீண்ட நாள் காதலியான மோனிகா டேவிட்டை திருமணம் செய்துகொண்டார் கவின்.

இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடத்திய கவின், தற்போது ரசிகர்களுக்கு மேலும் ஒரு குட் நியூஸை கூறி இருக்கிறார். அதன்படி தான் ஹீரோவாக நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை ஒரு புரோமோவாக வெளியிட்டுள்ளார் கவின்.

இதையும் படியுங்கள்... BiggBoss Tamil 7 : சம்பளத்தை டபுளாக உயர்த்தி ஹெவி அமௌண்ட்டை கேட்கும் கமல்.. எவ்வளவு தெரியுமா?

அதன்படி அவர் அடுத்ததாக நடிக்கும் படத்துக்கு ஸ்டார் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குனர் இளன் தான் இயக்க உள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். அந்த புரோமோவில் கவின் கவிதை ஒன்றை சொல்லி முடித்த உடன் யுவனின் குரலில் பாடல் ஒலிக்கிறது. யுவனின் பிறந்தநாள் ஸ்பெஷலாக இந்த புரோமோவை வெளியிட்டு உள்ளனர்.

ஸ்டார் படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆனது ஹரீஷ் கல்யாண் தான். அவருக்கு தோனி தயாரித்த எல்.ஜி.எம் பட வாய்ப்பு கிடைத்ததும் இப்படத்தில் இருந்து விலகினார். அதன் பின்னரே கவினை இப்படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் செய்தனர். டாடாவை போல் ஸ்டார் படமும் கவினுக்கு வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... தெறி பேபியாக நயன்தாரா... மெர்சல் நாயகனாக மாஸ் காட்டிய ஷாருக்கான்... பிகில் கிளப்பும் அட்லீயின் ஜவான் டிரைலர்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios