ஐஸ்வர்யா ராய், ஸ்ரீதேவிலா கிட்ட கூட வர முடியாது! பணக்கார நடிகை ஜெயலலிதாவின்.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
இந்திய திரையுலகில் இதுவரை யாராலும் பீட் பண்ண முடியாத பணக்கார நடிகை என்கிற இடத்தை, தக்க வைத்து கொண்டுள்ளவர் ஜெயலலிதா தான் என கூறப்படுகிறது. இவரின் சொத்து விவரங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
J Jayalalithaa
இந்திய திரையுலகில், அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்கிற இடத்தை அடைவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. ஒட்டு மொத்த ரசிகர்களாலும் விரும்பப்படும் நடிகைகளுக்கு மட்டுமே, கோடிகளில் சம்பளத்தை வாரி வழங்குவார்கள். அப்படி கோடிகளில் கல்லா கட்டி கட்டிய ஸ்ரீதேவி, ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோன், நயன்தாரா போன்ற நடிகைகள் கூட நெருங்க கூட முடியாத அளவுக்கு சொத்துக்களை சேர்த்தவர் ஜெயலலிதா என கூறப்படுகிறது.
60வது மற்றும் 70-களில் முடி சூடாத ராணியாக திரையுலகில் வலம் வந்த ஜெயலலிதாவின்... பணம், அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்கள், போன்றவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டால், எந்த நடிகையுடனும் ஒப்பிட முடியாத அளவுக்கு அதிகம் என கூறப்படுகிறது.
ஜெயலலிதா நடிகை என்பதை தாண்டி ஒரு வெற்றிகரமான அரசியல் நுணுக்கங்கள் அறிந்த இரும்பு பெண்மணியாக பார்க்கப்பட்டவர். லட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கும் அதிமுக என்கிற கட்சியை பெண் சிங்கம் போல் கட்டி காத்தவர். 5 முறை தமிழகத்தில் தன்னிகரற்ற முதல்வராக இருந்தவர். அம்மா என மக்களால் அழைக்கப்பட்டவர் என்பது அனைவரும் அறிந்ததே.
முன்னணி நடிகையாக இருந்த போதே.. MGR வழிகாட்டுதலால் தன்னுடைய 31 வயதில், திரையுலகில் இருந்து விலகி முழு நேர அரசியலில் கவனம் செலுத்த துவங்கினார். ஒரு அடிப்படை தொண்டராக களத்தில் இறங்கி கட்சி பணிகளை மேற்கொண்டார். இதுவே இவரின் படிப்படியான உயர்வுக்கு காரணமாகவும் அமைந்தது.
வாணி போஜனை தொடர்ந்து சன் டிவி சீரியல் நடிகைக்கு அடித்த ஜாக்பார்ட்! கதாநாயகியாக மாறிய சீரியல் நடிகை !
1997-ம் ஆண்டு, அவரது அரசியல் வாழ்க்கையின் உச்சக்கட்டத்தில் இருந்த சமயத்தில்... ஜெயலலிதாவின் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 10,500 புடவைகள், 750 ஜோடி பாதணிகள், 91 கைக்கடிகாரங்கள், 800 கிலோ வெள்ளி மற்றும் 28 கிலோ தங்கம் உள்ளிட்ட உள்ளிட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
2016 ஆம் ஆண்டில், அவரது சொத்து மீதான மற்றொரு விசாரணையில், அவரது உலோக இருப்பு 1250 கிலோ என்றும்... 21 கிலோ தங்கம், 42 கோடி மதிப்புள்ள சட்டப்பூர்வ அசையும் சொத்துகளுடன், 8 கார்களை வைத்துள்ளதாகவும், மொத்தத்தில் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ.900 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதுவரை இவரின் சொத்து மதிப்பை எந்த நடிகையும் பீட் பண்ணவில்லை என்பதால்... இவரே இந்திய நடிகைகளில் மிகவும் பணக்கார நடிகையாக பார்க்கப்படுகிறார். ஜெயலலிதா 1948 இல் முன்னாள் மைசூர் மாநிலத்தில் மாண்டியாவில் பிறந்தார். அவர் 1961 ஆம் ஆண்டில் கன்னட மொழி திரைப்படமான ஸ்ரீ ஷைலா மஹாத்மே என்னும் படத்தில், குழந்தை நட்சத்திரமாக தோன்றி பின்னர் ஒரு நடிகையாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகையாக இருந்த இவர், 1968 ஆம் ஆண்டில், பாலிவுட் திரைப்படமான இஸ்ஸத்தில் தர்மேந்திராவுடன் இணைந்து நடித்தார். NT ராமாராவ், அக்கினேனி நாகேஸ்வர ராவ், ஜெய்சங்கர் மற்றும் எம்ஜி ராமச்சந்திரன் உள்ளிட்ட அந்த நேரத்தில் மிகவும் வெற்றிகரமான நடிகர்களுடன் அவர் நடித்தார்.
1980 இல், அவர் திரையுலகில் இருந்து விலகி அரசியலுக்கு வந்தார். 1991 முதல் 2016 வரை ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தவர். டிசம்பர் 2016ல் தனது 68வது வயதில் உடல்நல பிரச்சனை காரணமாக உயிரிழந்தார். இவர் இறக்கும் போது கூட, முதல்வராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.