கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலுக்குள் அருவி போல் கொட்டிய மழை நீர்.. பயணிகள் கடும் அவதி! வைரல் போட்டோ..!
சென்னையில் இருந்து செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டிக்குள் அருவி போல் மழை நீர் கொட்டியதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தலைநகர் சென்னையில் இருந்து தினமும் திருச்சி மார்க்கமாக தென் மாவட்டங்களுக்கு 20-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் நேற்று மாலை வழக்கம் போல் 5.15 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி அதிவிரைவு ரயில் (வண்டி எண் 12633) நேற்று புறப்பட்டது.
Kanyakumari
அப்போது, வழியில் பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. கனமழையின் காரணமாக ஏசி பெட்டிக்குள் இருந்து மழை நீர் அருவி போல் ஊற்றியது. இதனால், பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். ரயிலினுள் மழை நீர் கொட்டியது குறித்து ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வேற போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
பின்னர், ரயில்வே ஊழியர் விரைந்து வந்து ஏசி பெட்டிக்குள் இருந்து கீழே கொட்டி இருந்த நீரை அப்புறப்படுத்தினர். இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.