நான் அப்பா ஆகப்போறேன்... திருமண நாளில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த புகழ் - குவியும் வாழ்த்துக்கள்
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆன புகழ், தன்னுடைய மனைவி பென்ஸி கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
pugazh
அது இது எது, கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் போன்ற நிகழ்ச்சிகளில் காமெடியனாக கலந்துகொண்டு பிரபலமானவர் புகழ். இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி தான். அந்நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனதற்கு புகழ் ஒரு முக்கிய காரணம். அவர் அடிக்கும் டைமிங் காமெடிகளும், கோமாளியாக செய்யும் லூட்டிகளும் வேறலெவலில் மக்கள் மத்தியில் ரீச் ஆனது.
cooku with comali pugazh wife
குக் வித் கோமாளி நிகழ்ச்சியால் நடிகர் புகழுக்கு சினிமா வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் சந்தானத்துடன் சபாபதி, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், சசிகுமாரின் அயோத்தி போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த புகழ், மிஸ்டர் ஜூ கீப்பர் என்கிற திரைப்படம் மூலம் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
இதையும் படியுங்கள்... சமந்தாவும், விஜய் தேவரகொண்டாவும் கம்பேக் கொடுத்தார்களா? கடுப்பேற்றினார்களா? குஷி படத்தின் விமர்சனம் இதோ
Pugazh, Bensi
இப்படி சினிமா மற்றும் சின்னத்திரை இரண்டிலும் கலக்கி வரும் புகழ், கடந்தாண்டு தன்னுடைய நீண்ட நாள் காதலியான பென்ஸி என்பவரை திருமணம் செய்துகொண்டார். புகழ் பென்ஸி தம்பதியின் திருமணத்தில் ஏராளமான சின்னத்திரை பிரபலங்களும் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில், இன்று தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் புகழ் - பென்சி தம்பதி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
pugazh wife Bensi Pregnant
அதன்படி தன் திருமண நாளான இன்று தன் மனைவி கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டு இன்ஸ்டாகிராமில் நீண்ட பதிவு ஒன்றையும் போட்டுள்ளார் புகழ், அதில், “என்னுடைய வளர்ச்சியில் வழித்துணையாய் வந்தவள், இப்போது என்னை என் வாழ்வின் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளாள். இத்தனை நாட்களில் எத்தனையோ பரிசுகளை எனக்கு அளித்தவள், ஆனால் இன்று அவள் அளித்த பரிசிற்கு ஈடு இணையே இல்லை. என் அனைத்து சுக துக்கங்களிலும் என்னுடன் இருந்தவள் நீ, இனி இன்னொரு உயிரும் நம்முடன் இருக்கப்போகிறது என்று நினைக்கும் போது, இதைவிட பெரிய மகிழ்ச்சி இந்த உலகத்தில் வேறெதுவும் இல்லை. என்னை தகப்பனாக்கிய என் தாயுமானவளுக்கு அன்பு முத்தங்கள். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் பென்ஸி” என குறிப்பிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்களும், சின்னத்திரை பிரபலங்களும் புகழுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... எதிர்பாராததை எதிர்பாருங்கள்... தனுஷ் பொண்டாட்டியும் பிக்பாஸ் வர்றாங்களாம் - இதென்ன புது டுவிஸ்டா இருக்கு!