எதிர்பாராததை எதிர்பாருங்கள்... தனுஷ் பொண்டாட்டியும் பிக்பாஸ் வர்றாங்களாம் - இதென்ன புது டுவிஸ்டா இருக்கு!
Bigg Boss Tamil Season 7 : தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் விவரம் கசிந்த வண்ணம் உள்ள நிலையில், தற்போது புது வரவாக தனுஷ் மனைவியும் எண்ட்ரி கொடுக்க போகிறாராம்.
BiggBoss Tamil
தமிழ் ரியாலிட்டி ஷோக்களில் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் இந்நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்கள் முடிவடைந்து உள்ளது. இதில் முதல் சீசனில் ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்திகாவும், மூன்றாவது சீசனில் முகென் ராவும், நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீசனில் ராஜுவும், ஆறாவது சீசனில் அசீமும் வெற்றிபெற்றனர்.
Kamalhaasan
விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் அலப்பறையாக தொடங்க உள்ளது. இதற்கு முந்தையை சீசன்களைப் போல் இல்லாமல் இந்த சீசனில் பல்வேறு புதுமைகள் காத்திருக்கின்றன. அதில் ஒன்று தான் 2 வீடு கான்செப்ட். வழக்கமாக ஒரே வீட்டில் 18 போட்டியாளர்களுடன் நடத்தப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி, இந்த முறை 2 வீட்டில் நடத்தப்பட உள்ளதாம். இதற்கான அறிவிப்பையும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் புரோமோவாக வெளியிட்டு இருந்தனர்.
இதையும் படியுங்கள்... ஜி.வி.பிரகாஷ் குமார் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'டியர்' படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல முன்னணி நிறுவனம்!
BiggBoss season 7 Tamil
இந்த இரண்டு வீடுகளை தயார் செய்யும் பணிகள் ஒருபக்கம் மும்முரமாக நடைபெற்று வர, மறுபுறம், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் தேர்வும் படு ஜோராக நடைபெற்று வருகிறது. அதன்படி ரேகா நாயர், மாகாபா ஆனந்த், செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், காக்கா முட்டை விக்னேஷ், நடிகர் பப்லு பிரித்விராஜ், நடிகை சோனியா அகர்வால், தொகுப்பாளர்கள் ரக்ஷன் மற்றும் ஜாக்குலின், விஜே பார்வதி என இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.
Sujitha Dhanush
தற்போது புது வரவாக பிக்பாஸ் போட்டியாளர்களின் லிஸ்ட்டில் இணைந்திருப்பவர் சீரியல் நடிகை சுஜிதா. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் என்கிற கேரக்டரில் நடித்து வந்த தனம், அந்த சீரியலில் இருந்து திடீரென விலகி உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல உள்ளதால் தான் அவர் விலகியதாக சின்னத்திரை வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. சுஜிதாவின் கணவர் பெயர் தனுஷ், அவர் விளம்பரங்களை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Jailer: போட்ரா வெடிய... ரெகார்ட் மேக்கர்! 'ஜெயிலர்' பட வெற்றி.. ரஜினிகாந்துக்கு கலாநிதிமாறன் கொடுத்த செக்!