Street Dog : தெரு நாய்களுக்கு உணவு கொடுப்பதை எதிர்ப்பதா.!! இனி அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த போலீஸ்

தெரு நாய்களுக்கு உணவளிப்பதை சில நபர்கள் தடுத்த நிலையில் அவ்வாறு தடுத்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 
 

The police have warned that action will be taken if they stop feeding stray dogs KAK

தெரு நாய்களுக்கு உணவு

ஒவ்வொரு தெருவிலும் 10க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றி வரும், அந்த நாய்களும் உணவுகளுக்காக ஏங்கி தவிக்கும் குப்பையில் கிடக்கும் உணவுகளை சாப்பிட்டு பசியாறும். அப்படிப்பட்ட தெரு நாய்களுக்கு பெண் ஒருவர் தினந்தோறும் தன்னால் முடிந்த வகையில் உணவுகள் வழங்கி வருகிறார். ஆனால் தெரு நாய்களுக்கு உணவு வழங்க கூடாது என ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கும் நிகழ்வு நாள்தோறும் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில்,  கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெனிஃபர். இவர் அப்பகுதியில் வீட்டுவேலை செய்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தெருநாய்களுக்கு உணவளிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் புதிதாக வந்துள்ள சில குடியிருப்பு வாசிகள் ஜெனிஃபரிடம் தெரு நாய்களுக்கு எல்லாம் உணவளிக்க கூடாது என தொடர்ந்து கூறி வந்துள்ளனர்.மேலும் திட்டவும் செய்துள்ளனர்.  

TENKASI : அடுத்தடுத்து OFF ஆகும் CCTV.. தென்காசியில் 95 கேமராக்கள் பழுது.! ஷாக் ஆகும் அரசியல் கட்சி

The police have warned that action will be taken if they stop feeding stray dogs KAK

வீட்டு உரிமையாளர்கள் எதிர்ப்பு

இதனால் விலங்குகள் ஆர்வலர் செலீனா என்பவரின் உதவியுடன் ஜெனிஃபர் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இந்நிலையில் இந்த புகார் குறித்து காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இருந்து ஜெனிஃபரை விசாரிக்க அழைத்துள்ளனர். அதற்காக ஜெனிஃபர் மற்றும் செலீனா ஆகிய இருவரும் வருகை தந்தனர். விசாரணை முடிந்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெனிஃபர்,  நாய்களுக்கு உணவு அளித்தால் திருட்டு பட்டம் கட்டிவிடுவோம் என மிரட்டப்படுவதாக புகார் தெரிவித்தாகவும், அப்போது நாய்களுக்கு உணவளிக்கலாம் என காவல் ஆணையாளர் அலுவலகத்தில் அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.

 அதே சமயம் குழந்தைகள் விளையாடுகின்ற இடத்தில் உணவளிக்காமல் இதர இடங்களில் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் இரவு 10 மணிக்கு மேல் உணவளிக்கலாம் என கூறியதாக தெரிவித்தார். மேலும் நாய்களுக்கு உணவளிப்பவர்களை யாரும் அச்சமுறுத்த கூடாது என கூறியதாகவும் தெரிவித்தார். 

The police have warned that action will be taken if they stop feeding stray dogs KAK

எச்சரிக்கை விடுத்த போலீஸ்

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செலீனா, இரவு நேரத்தில் நாய்களுக்கு உணவளிப்பது சரிதான் என காவல் ஆணையாளர் அலுவலகத்தில் அதிகாரிகள் கூறியதாகவும், யாரும் உங்களை தடுக்க கூடாது பயமுறுத்த கூடாது என சில சட்டங்களை கூறியதாக தெரிவித்தார். மேலும் யாரேனும் தடுத்தால் அவர்கள் மீது வழக்கு பதியப்படும் என அதிகாரிகள் கூறியதாகவும் தெரிவித்தார். 

வீட்டில் தனக்குத் தானே பிரசவம் பார்த்த செவிலியர்.. பிறந்த பச்சிளம் குழந்தையின் கால்களை வெட்டிய கொடூரம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios