விரைவில் ரிலீசுக்கு தயாராகி வரும் 'டியர்' படத்தின் உரிமையை கைப்பற்றியுள்ள பிரபல நிறுவனம் குறித்த தகவலை தற்போது படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது . 

Nutmeg Productions தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார்-ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள “டியர்” படத்தின் வெளியீட்டு உரிமையை தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ரோமியோ பிக்சர்ஸ் கைப்பற்றியுள்ளது. 

தமிழ் திரையுலகில் பல தரமான வெற்றித் திரைப்படங்களை தயாரித்து வழங்கியதுடன், பல ப்ளாக்பஸ்டர் படங்களை வெளியிட்டுள்ளது ரோமியோ பிக்சர்ஸ். நேர்கொண்ட பார்வை, வலிமை, நெஞ்சுக்கு நீதி, வீட்ல விஷேசம், டிரிக்கர், துணிவு, டைனோசர்ஸ் போன்ற ப்ளாக்பஸ்டர் படங்களை இந்நிறுவனம் வழங்கியுள்ளது குறிப்பிடதக்கது. 

ஐட்டம் டான்சர் கெட்டப்.. தலைநிறைய மல்லிபூவோடு ஜாக்கெட் மட்டும் போட்டு கவர்ச்சியில் சூடேற்றும் யாஷிகா!

இதை தொடர்ந்து, தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனைக்கு விருந்தளித்து வரும் ரோமியோ பிக்சர்ஸ் அடுத்ததாக ஜி.வி.பிரகாஷ் குமார்-ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள “டியர்” படத்தினை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. Nutmeg Productions சார்பில் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி மற்றும் G. பிருத்திவிராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட 'செத்தும் ஆயிரம் பொன்’ படத்தின் இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

TRP ரேட்டிங்கில் 'கயல்' சீரியலை ஓரம் கட்டிய 'எதிர்நீச்சல்'! சன் டிவியின் டாப் 5 சீரியல்களின் முழு விவரம்!

 ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முதன் முறையாக இணைந்து நடிப்பதால், ‘டியர்’ திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பெருமளவில் அதிகரித்துள்ளது. இப்படத்தில் காளி வெங்கட், இளவரசு, ரோகினி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம், ‘ப்ளாக் ஷீப்’ நந்தினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Ramya Krishnan Net Worth: 13 வயதில் நடிக்க துவங்கிய ரம்யா கிருஷ்ணனின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

இப்படத்திற்கு ஜெகதீஸ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ருகேஷ் படத்தொகுப்பையும், பிரகதீஸ்வரன் கலை இயக்கப் பணிகளையும், அனுஷா மீனாட்சி ஆடை வடிவமைப்பையும் கவனித்து வருகின்றனர். ‘ராப்’ ஐகான் அறிவு, ஏகாதசி, ஜிகேபி, விண்ணுலக கவி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். டியர் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில் இசை மற்றும் டிரெய்லர் விரைவில் வெளியாகவுள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.