Watch : தொழில் நிறுவனங்கள் கடன் பெறுவதை ஆன்லைன் மூலம் பதிவு முறை - மதுரையில் தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!

தொழில் நிறுவனங்கள் வங்கிகளில் சொத்து பிணையம் கொடுத்து கடன் பெறுவதை பதிவு செய்வதற்கு சார் பதிவாளர் அலுவலகத்திற்கு செல்லாமல் வங்கிகளில் இருந்தே ஆன்லைன் மூலமாக பதிவு செய்யும் திட்டத்தை மதுரையில் முதல்வர் துவக்கி வைத்தார்.
 

First Published Sep 16, 2022, 2:53 PM IST | Last Updated Sep 16, 2022, 2:53 PM IST

மதுரை அழகர்கோயில் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் "தோள் கொடுப்போம் தொழில்களுக்கு" எனும் தலைப்பில் தெற்கு மண்டல அளவிலான மாநாடு நடைபெற்றது, மாநாட்டில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு துறை செயலாளர்கள், ஆட்சியர், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் பங்கேற்றனர்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வளர்ச்சிக்காக புதிய திட்டங்களை துவக்கி வைத்து, சிறப்பாக செயல்பட்ட நிறுவனங்களுக்கும், அந்நிறுவனங்களுக்கு கடன் வழங்கியும், வங்கிகளுக்கும் விருதுகளையும் முதலமைச்சர் வழங்கினார்.

மேலும், தொழில் நிறுவனங்கள் வங்கிகளில் சொத்து பிணையம் கொடுத்து கடன் பெறுவதை பதிவு செய்வதற்கு சார் பதிவாளர் அலுவலகத்திற்கு செல்லாமல் வங்கிகளில் இருந்தே ஆன்லைன் மூலமாக பதிவு செய்யும் வசதியை துவக்கி வைத்தார்.

சிட்கோ தொழில்பேட்டையில் உள்ள சிறு குறு நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் வங்கி கடனுக்கான தடையின்மை சான்று, குடிநீர் இணைப்பு உள்ளிட்ட 12 சேவைகளுக்கான ஆன்லைன் வசதியை துவக்கி வைத்தார்.

பள்ளி மாணவர்களுக்கு புத்தாக்க சிந்தனைகளை வளர்க்கும் நோக்கில் "பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம்" எனும் புதிய திட்டத்தை அதற்கான இளச்சினையை வெளியிட்டு முதலமைச்சர் துவக்கி வைத்தார்.

இந்தாண்டு முதல் கட்டமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1.56 லட்சம் 9-12ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் 3120 ஆசிரியர்களுக்கும் தொழில் முனைதல் பற்றிய விழிப்புணர்வு அளிக்கப்படும். மாணவர் குழுக்களின் சிறந்த புத்தாக்க சிந்தனைகளுக்கு ரூ.25,000 முதல் ரூ.1 லட்சம் வரை ரொக்க பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது,.

பின்னர் மாநாட்டில் பேசிய முதலமைச்சர், "பாண்டியர் காலத்தில் தமிழ் வளர்த்த மதுரை இன்று தொழில் வளர்ப்பிலும் முன்னணியில் உள்ளது, மதுரையில் இயங்கி வரும் 50,000 குறு சிறு நிறுவனங்கள் மூலம் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து வருகிறது, தமிழகத்தில் புவிசார் குறியீடு பெற்ற 42 பொருட்களில் 18 பொருட்கள் தென் மாவட்டங்களை சேர்ந்தவை, இந்த பொருட்களுக்கு வெளி நாடுகளில் வரவேற்பு உள்ளதால் தொழில் நிறுவனங்கள் இதை அதிக அளவில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றார்.

மாட்டுத்தாவணி பகுதியில் இரண்டு கட்டமாக 10 ஏக்கரில் பூங்கா துவங்கப்படுகிறது, முதல் கட்டமாக 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யபடுகிறது, டைடல் பார்க் அமைவதன் மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்" என பேசினார்.
 

Video Top Stories