Tamil News Highlights : முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை
சுருக்கம்
முதலமைச்சர் ஸ்டாலினின் உடல்நலம் தேறி வருவதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் சிறிது நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் கொரோனா தொற்றில் இருந்து விடுபடுவதற்கான சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
08:53 PM (IST) Jul 15
சீயானின் விக்ரம் படத்திலிருந்து ஆதிரா லிரிக் வீடியோ பாடல் வெளியீடு
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களை தாமரை, பா விஜய், விவேக் எழுதியுள்ளனர். தற்போது ஆதிரா என்னும் தெலுங்கு பாடல் வரும் ஜூலை 18ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
தனுஷ் குரலில் "மேகம் கருக்காதா "..திருச்சிற்றம்பலம் லிரிக் வீடியோ இதோ!
ஏற்கனவே தாய் கிழவி பாடல் வெளியானது. இந்த பாடலுக்கு வரிகளை தனுஷ் எழுதி பாடியிருந்தார். இதை தொடர்ந்து தற்போது மேகம் கருக்குதா என்னும் பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலையும் தனுஷ் எழுதி பாடியுள்ளார்.
கணவனை பிரிந்து இருக்கும் மனைவி தாலி சங்கிலியை கழற்றுவதா.?? உயர் நீதிமன்றம் அதிருப்தி.. அதிரடி உத்தரவு.
கணவனை பிரிந்து வாழும் மனைவி தாலிச் சங்கிலியை கழற்றி வைப்பது என்பது கணவருக்கு மனரீதியாக அளிக்கும் டார்ச்சர் என்றும் அது சம்பிரதாய மற்ற செயல் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மனைவியின் துன்புறுத்தல் தாங்க முடியாமல் கணவன் மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரிய வழக்கில் நீதிபதிகள் இவ்வாறு கருத்து கூறியுள்ளனர்.மேலும் படிக்க
06:56 PM (IST) Jul 15
முன்பு வேஷ்டி..இப்ப சேலை..கிளாமர் தேவதையாய் மனதை கொள்ளையடிக்கும் மாளவிகா!
பிரபல டிசைனரிடமிருந்து மாளவிகா தற்போது பிரவுன் நிற நெட் புடவையை தேர்வு செய்துள்ளார். கண்ணாடி வேலைப்பாடுகள் நிறைந்த சேலை அழகுடன் கூடிய திகைப்பை ஏற்படுத்துகிறது.
பொன்னையனுக்கு வேட்டு வைத்த நாஞ்சில் கோலப்பனுக்கு ஆப்பு வைத்த எடப்பாடி... ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இன்றும் நீக்கம்.
அதிமுகவினர் குறித்து பொன்னையன் பேசியதாக ஆடியோ வெளியிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர் நாஞ்சில் கோலப்பனை அதிமுகவில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் அவருடன் 21 பேர் கூண்டோடு கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க
05:36 PM (IST) Jul 15
போலீஸ் உதவியுடன், போலீஸ் வாகனத்திலேயே கற்கள், பெட்ரோல் குண்டு கொண்டு வந்தார் ஓபிஎஸ்... பன்னீர் மீது பகீர் புகார்.
ஓ.பன்னீர் செல்வத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பை ரத்து செய்ய வேண்டுமென அதிமுக மாவட்ட செயலாளர் டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். கடந்த 11ஆம் தேதி போலீஸ் உதவியுடன், போலீஸ் வாகனத்திலேயே கற்கள் பெட்ரோல் குண்டுகள் கொண்டு வந்து ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார். காவல்துறையை ஓபிஎஸ் தவறாக பயன்படுத்தி உள்ளதால் அவரது பாதுகாப்பை ரத்து செய்யவேண்டும் என்றும் அவர் அந்ந புகாரில் கூறியுள்ளார்.மேலும் படிக்க
05:31 PM (IST) Jul 15
பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்னுடன் லலித் மோடி..அவரது முன்னாள் மனைவி குறித்த சில தகவல்!
சுஷ்மிதா சென்னும், மறைந்த மினல் மோடியும் தனிப்பட்ட முறையில் நன்கு அறிந்தவர்கள். இவர்கள் மூவரும் அடிக்கடி ஐபிஎல் போட்டிகளை ஒன்றாக பார்த்துள்ளனர் என பல பத்திரிகைகளில் எழுதப்பட்டு வருகிறது.
நாட்டை விட்டு வெளியேற மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சேவுக்கு தடை... இலங்கை உச்சநீதிமன்றம் அதிரடி!!
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவும், முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சேவும் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து இலங்கை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் வலுத்த நிலையில் கோட்டபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறினார். இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவும், முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சேவும் வெளியேறக்கூடும் என்பதால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்க வேண்டும் என இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவும், முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சேவும் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது, வரும் 28 ஆம் தேதி வரை இவர்கள் இருவரும் இலங்கையில் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாமனிதன் படம் குறித்தான ப்ரமோஷன் விழாவின் போது இயக்குனர் தனது பழைய ஞாபகங்களை பகிர்ந்து கொண்டதோடு தனது நாயகன் குறித்து பெருமிதமாக பேசிய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.
ஜாமினில் வெளிவந்த பாஜக நிர்வாகி சவுதாமணி.. மாலை அணிவித்து உற்சாக வரவேற்பளித்த தொண்டர்கள்..
மதக் கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி சவுதாமணி ஜாமினில் வெளிவந்தார். அவரை பாஜக தொண்டர்களும் அவரது ஆதர்வாளர்களும் மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். சில தினங்களுக்கு முன்பு அவரது வீட்டிற்கே சென்று போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
பிரசவத்திற்கு வந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து டாக்டர் உடலுறவு.. 5 பேருடன் உல்லாசம் அனுபவித்தது
பிரசவம் பார்க்க வந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ரகசிய கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் அம்மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பிரேசில் நாட்டில் நடந்துள்ளது. மேலும் படிக்க
03:55 PM (IST) Jul 15
மருத்துவமனையில் இருந்துக்கொண்டே பணி செய்யும் முதல்வர்.. நீலகிரி மழை நிலவரத்தை விசாரித்து குழு அமைப்பு
நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்யவும், நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தவும், வனத்துறை அமைச்சர் க.ராமச்சந்திரனுடன் இணைந்து பணியாற்ற, அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் செந்தில்பாலாஜி மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் ஆகியோரை நீலகிரி மாவட்டத்திற்கு அனுப்பிவைத்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மகளின் அந்தரங்க உறுப்பில் கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய கொடூர தாய்.. வித விதமாக டார்ச்சர் செய்து சைகோத்தனம்.
வளர்ப்புத்தாய் 6 வயது மகளின் அந்தரங்க உறுப்பில் கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கொடுமை செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடந்துள்ளதுமேலும் படிக்க
.
03:28 PM (IST) Jul 15
இந்திரா காந்தியான கங்கனா ரனாவத்.. ட்ரைலரை பார்த்து தமன்னா என்ன சொன்னார் தெரியுமா?
எமர்ஜென்சி டீசர் குறித்து பாலிவுட் பிரபலங்கள் அர்ஜுன் ராம்பால், திவ்யா தாத்தா மற்றும் ஏக்கா கபூர் ஆகியோர் பாராட்டு தெரிவித்திருந்த நிலையை தமன்னா பாட்டியா " பிளடி ப்ரில்லியண்ட் " என குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.
அலர்ட்!! மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 திட்டம்.. விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு..
மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதித்திட்டத்தில் மாதம் ரூ.1000 பெற மாணவிகள் விண்ணப்பித்தற்கான கால அவகாசம் ஜூலை 18 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் இது வரை 3.58 லட்சம் மாணவிகள் விண்ணபித்து உள்ளனர்மேலும் படிக்க
நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தன் உடல்நலக்குறைவால் இன்று காலமான நிலையில், அவரது உடலுக்கு நடிகர் கமல்ஹாசன், இயக்குனர்கள் மணிரத்னம், சீனு ராமசாமி, ஒளிப்பதிவாளர்கள் பிசி ஸ்ரீராம், ராஜிவ் மேனன் ஆகியோர் நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். மேலும் படிக்க
02:39 PM (IST) Jul 15
மக்களே உஷார்!! தொடர்ந்து 3 நாட்களுக்கு கனமழை.. இந்தெந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை
தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு நீலகிரி, கோவை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க
02:25 PM (IST) Jul 15
Pratap Pothen Second Wife : மறைந்த பிரதாப் போத்தன் இரண்டாவது மனைவி மற்றும் மகள் பற்றி தெரியுமா?
Pratap Pothen Second Wife and daughter : கடந்த 1985 ஆம் ஆண்டு மிகவும் பிரபல நடிகராக இருந்த பிரதாப் போத்தன் நடிகை ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை ஒரு ஆண்டு மட்டுமே நிலைத்திருந்தது.