இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களை தாமரை, பா விஜய், விவேக்  எழுதியுள்ளனர். தற்போது ஆதிரா என்னும் தெலுங்கு பாடல் வரும் ஜூலை 18ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

சீயான் விக்ரம் தற்போது பொன்னியின் செல்வன், கோப்ரா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வனில், ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ளார் விக்ரம். இவரது போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆகின. இதற்கிடையே திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் நடத்தப்பட்ட டீசர் வெளியீட்டு விழாவில் விக்ரம் கலந்து கொள்ளவில்லை.

மேலும் செய்திகளுக்கு..பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்னுடன் லலித் மோடி..அவரது முன்னாள் மனைவி குறித்த சில தகவல்!

 இதை அடுத்து இவர் நடித்த மற்றொரு படமான கோபுரா படத்தின் ஆடியோ ரிலீஸ் க்கு என்ட்ரி கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ பேனரின் கீழ் எஸ்.எஸ். லலித்குமார் தயாரித்துள்ள கோபுரா படத்தை ஆர் அஜய் ஞானமுத்து என்பவர் எழுதி, இயக்கியுள்ளார். 

 தமிழ் ஆக்சன் திரில்லரான இந்த படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான் உள்ளிட்டோ நடித்துள்ளனர். கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதிமற்றும் இர்பான் தமிழுக்கு இந்த படம் மூலம் என்ட்ரி கொடுக்கின்றனர். இவர்களுடன் கே எஸ் ரவிக்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கான இசை வேலைகளை ஏ ஆர் ரகுமான் கவனிக்க, ஒளிப்பதிவு ஹரிஷ் கண்ணன் மற்றும் யுவன் ஸ்ரீனிவாசன் எடிட்டிங் செய்து வருகின்றனர். ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் ஆடியோவாக வெளியானது.

மேலும் செய்திகளுக்கு..முன்பு வேஷ்டி..இப்ப சேலை..கிளாமர் தேவதையாய் மனதை கொள்ளையடிக்கும் மாளவிகா!

கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படம் கொரோனா பாதிப்பு காரணமாக பல கட்டங்களாக நிறுத்தப்பட்டு தற்போது படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராகி வருகிறது. ஏற்கனவே ஏ ஆர் ரகுமான் விக்ரமின் புதிய மன்னர்கள், ராவணன், ஐ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் தற்போது கோப்ரா மூலம் நான்காவது முறையாக விக்ரமுடன் இணைகிறார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களை தாமரை, பா விஜய், விவேக் எழுதியுள்ளனர். தற்போது ஆதிரா என்னும் தெலுங்கு பாடல் வரும் ஜூலை 18ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

மேலும் செய்திகளுக்கு..உச்சகட்ட கவர்ச்சியில் குதித்த தர்ஷா குப்தா...அரைகுறை உடையில் கவரும் சீரியல் நடிகை!

Scroll to load tweet…