Pratap Pothen Second Wife : மறைந்த பிரதாப் போத்தன் இரண்டாவது மனைவி மற்றும் மகள் பற்றி தெரியுமா?
Pratap Pothen Second Wife and daughter : கடந்த 1985 ஆம் ஆண்டு மிகவும் பிரபல நடிகராக இருந்த பிரதாப் போத்தன் நடிகை ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை ஒரு ஆண்டு மட்டுமே நிலைத்திருந்தது.
Pratap Pothen Second Wife and daughter
நடிகரும் தயாரிப்பாளருமான பிரதாப் போத்தன் இன்று காலை காலமானார். இவர் மம்மூட்டி நடித்த சிபிஐ 5 திரைப்படத்தில் கடைசியாக நடித்திருந்தார். சென்னையில் வசித்து வந்த பிரதாப் இன்று காலை அவரது இல்லத்தில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார். தென்னிந்திய படங்களில் பணியாற்றியுள்ள நடிகர் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்பட தொழில்களிலும் முன்னனியாக இருந்தவர்.
Pratap Pothen Second Wife and daughter
நடிப்பால் கவர்ந்த இவர் திரைக்கதை எழுதுதல், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக பல பாத்திரங்களை ஏற்றுள்ளார். பிரபல நடிகரான இவரது மரணச் செய்தி அவரது நண்பர்கள் மட்டும் குடும்பத்தினரையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது இழப்பிற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு..."பார்த்திபனின் இரவின் நிழல்"....படக்குழுவின் கலகலப்பான வேண்டுகோள்!
1978 ஆம் ஆண்டு அரவம் என்னும் திரைப்படத்தின் மூலம் சினிமாவுல நுழைந்தார் பிரதாப் போத்தல், தமிழில் பன்னீர் புஷ்பங்கள், வெற்றி விழா, சீவலப்பேரி பாண்டி, லக்கி மேன் உள்ளிட்ட பலப்படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
Pratap Pothen Second Wife and daughter
1985 ஆம் ஆண்டு "மீண்டும் ஒரு காதல் கதை" என்னும் படத்திற்காக தேசிய விருதை பெற்றிருந்த இவர் கிரீன் ஆப்பிள் என்னும் விளம்பர நிறுவனத்தையும் நடத்தி வந்தார். பிரதாப் இயக்கத்தில் ரிதுபேதம், டெய்சி மற்றும் மற்றும் ஒரு யாத்ரா மொழி ஆகிய மூன்று மலையாள படங்கள் உருவாகியுள்ளன. மோகன்லால் மற்றும் சிவாஜி கணேசன் முக்கிய வேடங்களில் ஒரு யாத்ரா மொழி நல்ல வரவேற்பை பெற்றது. மோகன்லாலின் "நீதி காக்கும் பூதம்" என்னும் படத்தில் தற்போது நடித்து வந்தார் மறைந்த பிரதாப் போத்தன்.
மேலும் செய்திகளுக்கு...பக்கா கிளாமராக மாறிய கீர்த்தி சுரேஷ்!.. சொக்க வைக்கும் போட்டோஸ் இதோ..
Pratap Pothen Second Wife and daughter
கடந்த 1985 ஆம் ஆண்டு மிகவும் பிரபல நடிகராக இருந்த பிரதாப் போத்தன் நடிகை ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை ஒரு ஆண்டு மட்டுமே நிலைத்திருந்தது. இந்த ஜோடி 1986 ஆம் ஆண்டு பிரிந்தனர். இதை அடுத்து பிரதாப் போத்தன் "அமலா சத்தியநாத்" என்பவரை மறுமணம் செய்து கொண்டார். 22 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இவர்களுக்கு கேயாஎ ன்ற மகள் உள்ளார். இவர்கள் 2012 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
மேலும் செய்திகளுக்கு...விஜய்யின் சொகுசு கார் வழக்கு பின்னணி என்ன?... உயர்நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்தது ஏன்? - முழு விவரம்
தற்போது தனியாக வசித்து வரும் பிரதாப் போத்தல் குடியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலை உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது திரைத்துறையினர் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.