"பார்த்திபனின் இரவின் நிழல்"....படக்குழுவின் கலகலப்பான வேண்டுகோள்!

ரோபோ சங்கர், வரலட்சுமி, பார்த்திபன் உள்ளிட்டோர் படம் குறித்த சுவாரசியமாக பேசியுள்ள காட்சிகள் இடம் பெற்றுள்ளனர். அதோடு பார்த்திபனை வெகுவாக பாராட்டி உள்ள வரலட்சுமி தயவு செய்து இந்த படத்தை அருகில் உள்ள திரையரங்கில் சென்று பாருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Parthiban iravin nizhal movie crew request

இயக்குனரும், நடிகருமான ஆர்.பார்த்திபன் வித்தியாசங்களுக்கு பெயர் போனவர். அவர் சமீபத்திய திட்டமான இரவின் நிழல் உலகின் முதல் நேரியல் மற்றும் ஒற்றை ஷாட் படமாக உருவாகியுள்ளது. 56 செட்கள் அமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இந்த படம் 90 நிமிட கேமரா சுழற்சியில் உருவாக்கப்பட்டது. ஒளிப்பதிவாளர் ஏ வில்சன் மற்றும் அவரது குழு படத்தை அருமையாக கையாண்டுள்ளனர்.

இரவின் நிழல் மிகப் பெரிய ஒரு தொழில்நுட்ப சாதனையாக உருவாகியுள்ளது. விடாமுயற்சி மற்றும் சகிப்புத்தன்மையின் மகத்தான மனித சாதனையாகவும் கூறப்படுகிறது. நடிகர்களின் இடைவிடாத உழைப்பே தீர்மானிக்கும் படமாக இது உருவாகியுள்ளது. அகிரா புரொடக்சன் மற்றும் பயாஸ்கோப் பிலிம்ஸ் கீழ்  பார்த்திபன் தயாரித்துள்ள இந்த படத்தை அவரே எழுதி, இயக்கி, நாயகனாகவும் நடித்துள்ளார். திரில்லர் படமான  இதில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், பிரியங்கா உள்ளிட்டோர் முக்கிய இடத்தில் நடித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு...15 வயதில் தந்தையை இழந்த பிரதாப் போத்தன்... சினிமாவிற்குள் வந்தது எப்படி?

Parthiban iravin nizhal movie crew request

படத்தின் இசைப் பணிகளை ஏ ஆர் ரகுமான் மேற்கொண்டுள்ளார். இந்த படம்  ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸில் இடம் பிடித்துள்ளது. அதோடு சமீபத்தில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் நுழைந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது இரவின் நிழல். 75 ஏக்கம் நிலத்தில் பிரம்மாண்ட செட்டுகள் அமைக்கப்பட்டு 90 நாள் ஒத்திகைக்கு பிறகு இந்த கதை படமாக்கப்பட்டுள்ளது. ஒரே சார்ட் என்பதால் ஒருவர் தவறு செய்தால் கூட மொத்த படப்பிடிப்பு பாதிக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த படத்தின் வெற்றி ஒட்டுமொத்த பட கிளைகளின் உழைப்பாகவே உள்ளது.

மேலும் செய்திகளுக்கு...பக்கா கிளாமராக மாறிய கீர்த்தி சுரேஷ்!.. சொக்க வைக்கும் போட்டோஸ் இதோ..

உலகம் முழுதும் திரையிடப்பட்டுள்ள இந்தப் படம் வித்தியாசமான முயற்சியாக பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியானது மேக்கிங் வீடியோ பலரையும் ஆச்சரியப்படுத்தியது. இது குறித்து ரஜினிகாந்த் வெளியிட்டு இருந்த பதிவில்,  அற்புதமான தொழில்நுட்பம் குறித்து பாராட்டி இருந்தார். இந்த படம் ஒரு தனிநபர் தனது மகளைத் தேடி கண்டுபிடிக்கும் கதைகளத்தை கொண்டுள்ளது. இதற்கு இடையே போலி சாமியார்களின் வேடமும் தோலுரிக்கப்படுகிறது.

 

மேலும் செய்திகளுக்கு...ஒரே ஷாட்டில் எடுத்த படம்... பார்த்திபனின் விடா முயற்சிக்கு விஸ்வரூப வெற்றி கிடைத்ததா? - இரவின் நிழல் விமர்சனம்

தற்போது இந்த படம் குறித்து இன்ஸ்டாவில் வரலட்சுமி பதிவிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. அதில்  ரோபோ சங்கர், வரலட்சுமி, பார்த்திபன் உள்ளிட்டோர் படம் குறித்த சுவாரசியமாக பேசியுள்ள காட்சிகள் இடம் பெற்றுள்ளனர். அதோடு பார்த்திபனை வெகுவாக பாராட்டி உள்ள வரலட்சுமி தயவு செய்து இந்த படத்தை அருகில் உள்ள திரையரங்கில் சென்று பாருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios