MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 15 வயதில் தந்தையை இழந்த பிரதாப் போத்தன்... சினிமாவிற்குள் வந்தது எப்படி?

15 வயதில் தந்தையை இழந்த பிரதாப் போத்தன்... சினிமாவிற்குள் வந்தது எப்படி?

கடந்த சில மாதங்களாக, உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை எடுத்து வந்த பிரபல இயக்குனரும், நடிகருமான பிரதாப் போத்தன்... இன்று காலை 8 மணியளவில் உயிரிழந்தார். இவரது இழப்பு திரையுலகினர் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், இவரை பற்றி பலரும் அறிந்திடாத தகவல்கள் தொடர்ந்து வெளியாக துவங்கியுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Jul 15 2022, 11:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

பிரதாப் போத்தன் யார்? அவர் எப்படி சினிமாவிற்குள் வந்தார் என்பது குறித்து பார்ப்போம்:

1952 ஆம் ஆண்டு, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில்... கொளத்திங்கால் போத்தன் மற்றும் பொன்னம்மா போத்தன் ஆகியோருக்கு இளைய மகனாக பிறந்தவர் தான் பிரதாப். இவருடைய தந்தை கொளத்திங்கால் போத்தன், ஒரு தொழிலதிபர். வசதியான குடும்பத்தில் பிறந்த பிரதாப் தன்னுடைய 5 வயதில் ஊட்டியில் உள்ள லாரன்ஸ் ஸ்கூல் என்ற பள்ளியில் ஹாஸ்டலில் தங்கி தன்னுடைய பள்ளிப்படிப்பை தொடங்கினார். 

28

தற்போது திரைத்துறையில், இயக்குனராகவும், நடிகராகவும் வெற்றிவாகை சூட்டியுள்ள பிரதாப் போத்தன், பள்ளி பருவத்தில் ஓவியம் வரைவதில் தான் அதிக ஆர்வம் காட்டி வந்தார். இவருக்கு 15 வயது இருக்கும் போதே தன்னுடைய தந்தையை இழக்க நேரிட்டது. அப்போது அவரது மூத்த சகோதரரான ஹரி போத்தன் குடும்பத்தை கவனித்து கொண்டார். சில திரைப்படங்களையும் இவர் தயாரித்துள்ளார்.

மேலும் செய்திகள்: இடுப்பை வளைத்து... நெளித்து... ஓவர் கவர்ச்சியில் ஆட்டம் போடும் கீர்த்தி சுரேஷ்..! ஷாக் ஆக்கிய ஹாட் போஸ்!
 

38

பள்ளி படிப்பை முடித்த பின்னர் சென்னை வந்த பிரதாப், தன்னுடை கல்லூரி  நண்பர்களின் உதவியோடு நாடகங்களில் நடிக்க துவங்கினார். படிப்படியாக ஓவியம் வரைவதைவிட நடிப்பில் இவரது முழு ஆர்வமும் சென்றது. பின்னர் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் பட்டம் பெற்ற பிரதாப், மும்பை விளம்பர நிறுவனத்தில் எழுத்தாளராகப் பணிபுரிந்தார், மேலும் சிஸ்டாஸ் ஆட் ஏஜென்சி மற்றும் ஹிந்துஸ்தான் தாம்சன் ஆகிய நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார்.

48

இவரது சகோதரர் சில படங்களை தயாரித்துள்ளதால், இவருக்கு மலையாளத்தில் நடிக்கும் வாய்ப்பு எளிதாகவே கிடைத்தது. 'அரவம்' என்கிற படத்தில் அறிமுகமான பிரதாப், தன்னுடைய இரண்டாவது படத்தை தமிழ் மாற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் நடித்தார். அதாவது அழியாத கோலங்கள் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார்.

மேலும் செய்திகள்: 'கார்கி' படத்தில் சாய்பல்லவிக்கு பதில் முதலில் நடிக்க இருந்தது இவர் தான்..!
 

58

அடுத்தடுத்து இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. சிறந்த நடிகராக மட்டும் இன்றி, திரையுலகில் 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். குறிப்பாக பிரதாப் இயக்கத்தில் வெளியான, ஜீவா, வெற்றி விழா, சீவலப்பேரி பாண்டி, மை டியர் மாத்தாண்டன் போன்ற படங்கள் தற்போது வரை, ரசிகர்கள் மனதை விட்டு நீங்காத இடம்பிடித்த படங்களாக உள்ளது.
 

68

இவர் இயக்கிய முதல் படமான மீண்டும் ஒரு காதல் கதை படத்தில் ராதிகாவுடன் இணைந்து நடித்தபோது இருவருக்கும் இடைய காதல் மலர்ந்தது. இவரும் திருமணமும்  கொண்டனர். ஆனால் இவர்களது திருமண வாழ்க்கை ஒரு வருடத்தில் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்: நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தை ஒளிபரப்ப Netflix மறுத்தது ஏன்? வெளியான அதிரடி காரணம்!
 

78

ராதிகாவை பிரிந்த பின்னர் அமலா சத்யநாத் என்பவரை 1990 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கீயா என்கிற மகள் உள்ள நிலையில், 2012 ஆம் ஆண்டு மனைவி அமலாவிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.

88

இப்படி வாழ்க்கையில், ஏற்ற இறக்கங்களை சந்தித்த இவர், சென்னையில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் வசித்து வந்தார். மேலும் சமீப காலமாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட இவர் இன்று காலை 8 மணிக்கு உயிர் இழந்துள்ள சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மேலும் செய்திகள்: கலர் ஃபுல் உள்ளாடையோடு... சைசான உடல் அழகை காட்டி கவர்ச்சி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் ஸ்ரீநிதி ஷெட்டி!
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
சிபி சக்கரவர்த்தி கொடுத்த செம அப்டேட்: ‘ரஜினி 173’ ஷூட்டிங் எப்போது? வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!
Recommended image2
ஆரோக்கியமான போட்டி.. ஆச்சரியமான ஹிட்! எம்.ஜி.ஆர் - சிவாஜி மோதலில் உருவான காவியங்கள்.. திரையுலகின் பொற்கால ரகசியங்கள்!
Recommended image3
இயக்குநர், நடிகர்.. இப்போ தயாரிப்பாளர்! பிரதீப் ரங்கநாதனின் 'வேற லெவல்' அவதாரம்! படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved