'கார்கி' படத்தில் சாய்பல்லவிக்கு பதில் முதலில் நடிக்க இருந்தது இவர் தான்..!
நடிகை சாய்பல்லவி நடிப்பில் நாளை வெளியாக உள்ள 'கார்கி' படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை குறித்த சுவாரஸ்ய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகை சாய் பல்லவி ஒரே மாதிரியான கதைகளை தேர்வு செய்து நடிக்காமல், வித்தியாசமான கதையையும், கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடிப்பதில் அதிக ஆர்வம் கட்டி வருகிறார். அந்த வகையில், தெலுங்கில் நடிகர் ராணா டகுபதிக்கு ஜோடியாக ‘விரட பர்வம்’ என்கிற படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம், நக்ஸ்லைட்டான ராணாவை காதலிக்கும் மிகவும் துணிச்சலான பெண் கதாபாத்திரம்.
இந்த படத்தை தொடர்ந்து சாய் பல்லவி நடிப்பில், நாளை வெளியாக உள்ள 'கார்கி' படத்தின் பிரீமியர் ஷோவை பார்த்த பலரும் வெகுவாக இப்படத்தை பாராட்டி வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தை ஒளிபரப்ப Netflix மறுத்தது ஏன்? வெளியான அதிரடி காரணம்!
பெண்கள் முதல் குழந்தைகள் வரை... ஒவ்வொரு நாளும் சில காம கொடூரர்களால் சந்திக்க நேரும் சமூக பிரச்சனை குறித்து பேசியுள்ளது இப்படம்.
தவாறே செய்யாத தன்னுடைய தந்தை, ஒரு பாலியல் வழக்கில் கைதாகிறார். அவரை நிரபராதி என நிரூபிக்க போராடும் ஒரு மகளாக சாய்பல்லவி நடித்துள்ளார். 'பிரேமம்' படத்திற்கு பின் இந்த படத்தில் ஆசிரியை அவதாரம் எடுத்துள்ளார் சாய் பல்லவி.
மேலும் செய்திகள்: கலர் ஃபுல் உள்ளாடையோடு... சைசான உடல் அழகை காட்டி கவர்ச்சி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் ஸ்ரீநிதி ஷெட்டி!
மேலும் குற்றமே செய்யாமல், ஒரு வழக்கில் சிக்கினால் கூட அவர்களது குடும்பம் எப்படி பட்ட இன்னல்களுக்கு ஆளாகிறது. மீடியாக்கள் எப்படி அவர்களை சித்தரிக்கிறது என மிகவும் எதார்த்தமாக இந்த படத்தை இயக்கி சொல்ல வந்த கருத்தை எடுத்து கூறியுள்ளார் இயக்குனர் கவுதம் ராமச்சந்திரன்.
இந்த படத்தில் தன்னுடைய திறமையான நடிப்பை சாய் பல்லவி வெளிப்படுத்தியுள்ளார். எனினும் இப்படத்தில் சாய் பல்லவியின் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் பரிசீலிக்க பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தானாம். ஆனால் அவரால் சில காரணங்களால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போக, அவரே தான் சாய் பல்லவி பேரை பறித்துரைத்ததாக கூறப்படுகிறது. இப்படி தான் இந்த படத்தின் உள்ளே வந்துள்ளார் சாய் பல்லவி.
மேலும் செய்திகள்: தாத்தா ரஜினியை போலவே இருக்கும் பேரன்... தனுஷுடன் 'தி கிரே மேன்' ப்ரீமியர் ஷோவில் கலக்கிய யாத்ரா - லிங்கா!
Sai Pallavi
'கார்கி' படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார், ஸ்ரீயாந்தி மற்றும் பிரேம்கிருஷ்ணா அக்காது ஒளிப்பதிவு செய்துள்ளனர், ஷபீக் முகமது அலி படத்தொகுப்பு செய்துள்ளார். இப்படத்தில் காளி வெங்கட், ஐஸ்வர்யா லட்சுமி, ஆர்.எஸ்.சிவாஜி, ஜெயப்பிரகாஷ், லிவிங்ஸ்டன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.