தாத்தா ரஜினியை போலவே இருக்கும் பேரன்... தனுஷுடன் 'தி கிரே மேன்' ப்ரீமியர் ஷோவில் கலக்கிய யாத்ரா - லிங்கா!
நடிகர் தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் திரைப்படமான 'தி கிரே மேன்' பிரீமியர் ஷோ இன்று நடைபெற்ற நிலையில், தனுஷ் தன்னுடைய மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்து கொண்டுள்ளார். தற்போது இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில், ஆரம்பத்தில் மோசமான விமர்சனங்களை பெரும் நடிகர்கள் தங்களுடைய விடாமுயற்சியால் இன்று முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அப்படி தன்னுடைய முதல் படத்திலேயே பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானவர் தான் தனுஷ்.
பின்னர் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால், தேசிய விருது உட்பட பல விருதுகளை வாங்கி குவித்தார். தற்போது கோலிவுட், பாலிவுட் திரையுலகை தாண்டி ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளார்.
மேலும் செய்திகள்: அனைவரும் ஏன் 'கார்கி' படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும்? விமர்சனம் இதோ..!
இப்படம் வருகிற ஜூலை 22-ந் தேதி ரிலீசாக உள்ள நிலையில், தி கிரே மேன் படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு கூட, 'தி கிரே மேன்' படத்தில் இருந்து தனுஷ் நடித்திருந்த படு மாஸான சண்டைக் காட்சியை படக்குழு வெளியிட்டிருந்தது.
மேலும் செய்திகள்: கலர் ஃபுல் உள்ளாடையோடு... சைசான உடல் அழகை காட்டி கவர்ச்சி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் ஸ்ரீநிதி ஷெட்டி!
அதில் ஹாலிவுட் நடிகர், நடிகைகளை செம்ம ஸ்டைலிஷாக தனுஷ் அடித்து துவம்சம் செய்யும் படியான காட்சிகள் இடம்பெற்றிருந்தது. ஒரு நிமிடம் வெளியான இந்த வீடியோ காட்சியை பார்த்த தனுஷின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் இந்த காட்சியை வைரலாக்கி கொண்டாடினர்.
இந்நிலையில் இன்று 'தி கிரே மேன்' படத்தின் பிரீமியர் ஷோ நடந்துள்ளது. இதில் நடிகர் தனுஷ் தன்னுடைய மகன்கள் யாத்ரா - லிங்காவுடன் கலந்து கொண்டார்.
மேலும் செய்திகள்: படுக்கை அறையில்... மேலாடையில் ஒற்றை கொக்கியை மட்டும் போட்டு எல்லை தாண்டிய கவர்ச்சியில் பிரியா வாரியர்!
கோட் சூட்டில் பார்க்கவே செம்ம ஸ்டைலிஷாக தனுஷின் மகன்கள் இருவரும் உள்ளனர். அதே போல் யாத்ரா நன்கு வளர்ந்து, பார்ப்பதற்கு... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இளம் வயதில் இருந்தது போலவே ஒரு ஜாடைக்கு உள்ளதாக நெட்டிசன்கள் தற்போதைய புகைப்படத்தை பார்த்து தங்களது கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.
பல ஹாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்ட 'தி கிரே மேன்' ப்ரீமியர் ஷோ புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள்: சூடு பிடிக்கும் பிக்பாஸ் சீசன் 6 பணிகள்! பிரபல தொகுப்பாளரை களமிறக்கும் விஜய் டிவி! உறுதியான இரு போட்டியாளர்கள்