சூடு பிடிக்கும் பிக்பாஸ் சீசன் 6 பணிகள்! பிரபல தொகுப்பாளரை களமிறக்கும் விஜய் டிவி! உறுதியான இரு போட்டியாளர்கள்
விரைவில் பிக்பாஸ் சீசன் 6 (biggboss seasson 6) நிகழ்ச்சி துவங்க உள்ள நிலையில், அதற்கான போட்டியாளர்கள் தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அந்த வகையில் தற்போது இரண்டு போட்டியாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஆரம்பத்தில் சிலரால் எதிர்க்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி, தற்போது வெற்றிகரமாக ஐந்து சீசன்களை கடந்து ஆறாவது சீசனில் காலடி எடுத்து வைக்க உள்ளது.
விரைவில் பிக்பாஸ் சீசன் 6 துவங்க உள்ள நிலையில், இதனை நடிகர் கமலஹாசன் மற்றும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சிம்பு ஆகிய இருவருமே சேர்ந்து தொகுத்து வழங்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்: ஷாருகான் மகனை விடாது கருப்பாய் துரத்தும் போதை மருந்து வழக்கு! மும்பை நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள பிரபலங்கள் பற்றிய தகவல்கள் கசிய துவங்கியுள்ளது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று கிராமத்து மனம் கமழும் நாட்டுப்புற பாடல்களை பாடி அசத்திய, ராஜலக்ஷ்மி கலந்து கொள்ள உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இந்த பட்டியலில் பிரபல தொகுப்பாளரின் பெயரும் அடிபட்டு வருகிறது.
மேலும் செய்திகள்: முதல் படத்திலேயே சம்பள விஷயத்தில் நயன்தாராவை மிஞ்சிவிட்டாரா 'கோப்ரா' பட நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி?
விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை அடுத்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவரும் ரியாலிட்டி ஷோவான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ரக்சன் பெயர் இடம் பெற்றுள்ளது. கடந்த சீசனிலேயே ரக்சன் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த சீசன் கலந்து கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மேலும் செய்திகள்: படு மோசமான கிளாமர் உடையில்... யாஷிகா கொடுத்த சைடு போஸ்!! செம்ம ஹாட் லேட்டஸ்ட் போட்டோஸ்!!
அதேபோல் கடந்த சீசனில் தெருக்கூத்து கலைஞர் ஆன தாமரை, கானா பாடகியான இசைவாணி, காஸ்டியூம் டிசைனர் மதுமிதா, பாப் பாடகி ஜக்கி பெரி போன்ற பல புதுமுக கலைஞர்கள் கலந்து கொண்டதால் இந்த முறையும் இப்படி பல இளம் திறமையாளர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.