ஷாருகான் மகனை விடாது கருப்பாய் துரத்தும் போதை மருந்து வழக்கு! மும்பை நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான், போதை மருந்து வழக்கில் குற்றவாளி அல்ல என போதை பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்த நிலையில்.. தற்போது மும்பை நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
 

Mumbai court orders to sharukkhan son Aryan Khan passport to be handed over

பாலிவுட் திரையுலகில் கிங்காங் என அழைக்கப்படும், நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மும்பையில் இருந்து கோவாவுக்கு சென்ற சொகுசு கப்பலில் போதை மருந்து விருந்தில் கலந்து கொண்டார் என்கிற குற்றத்திற்காக, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த பார்ட்டியில் பங்கேற்றவர்களிடம் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் இந்த பார்ட்டியில் பங்கேற்ற நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் உட்பட 8 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

இதை அடுத்து நடத்தப்பட்ட தீவிர விசாரணைக்கு பின், ஆரியன் கானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மும்பையில் உள்ள ஆதார் ரோடு சிறைச்சாலையில் அடைத்தனர். ஆரியன் கான் தரப்பில் இருந்து ஜாமீன் கேட்டு பலமுறை தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. பின்னர் ஒருவழியாக ஆரியன் கானுக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்.

மேலும் செய்திகள்: முதல் படத்திலேயே சம்பள விஷயத்தில் நயன்தாராவை மிஞ்சிவிட்டாரா 'கோப்ரா' பட நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி?
 

Mumbai court orders to sharukkhan son Aryan Khan passport to be handed over

இதைத்தொடர்ந்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த ஆரியன் கான் வழக்கு தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக 6 ஆயிரம் பக்கங்களுடன் கூடிய குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஆரியன் கான் உட்பட 14 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து ஆரியன் கான் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். மேலும் குற்ற பத்திரிக்கையில்  இருந்து அவரது பெயரும் நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆரியன் கான் போதை மருந்து எதுவும் உட்கொள்ளாமல் இருந்ததாகவும், அவரிடம் இருந்து எவ்வித போதை பொருளும் கைப்பற்றப்பட்டதாக ஆதாரங்கள் எதுவும் இல்லாததால் இந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார் என போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்: படு மோசமான கிளாமர் உடையில்... யாஷிகா கொடுத்த சைடு போஸ்!! செம்ம ஹாட் லேட்டஸ்ட் போட்டோஸ்!!
 

Mumbai court orders to sharukkhan son Aryan Khan passport to be handed over

தற்போது ஆரியன் கானை விடாமல் துரத்தும் கருப்பாய் இந்த வழக்கு அமைந்துள்ளது. ஆரியன் கான் குற்றவாளி அல்ல என போதை பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்த நிலையில், திடீரென ஆரியன் கான் தன்னுடைய பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று மும்பை நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தகவல் பாலிவுட் திரையுலகினர் மத்தியில் மீண்டும் பேசும் பொருளாய் மாறியுள்ளது.

மேலும் செய்திகள்: 'பொன்னியின் செல்வன்' பட வாய்ப்பை நிராகரித்த விஜய் உட்பட 9 பிரபலங்கள்..! யார் யார் தெரியுமா?
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios