MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 'பொன்னியின் செல்வன்' பட வாய்ப்பை நிராகரித்த விஜய் உட்பட 9 பிரபலங்கள்..! யார் யார் தெரியுமா?

'பொன்னியின் செல்வன்' பட வாய்ப்பை நிராகரித்த விஜய் உட்பட 9 பிரபலங்கள்..! யார் யார் தெரியுமா?

இயக்குனர் மணிரத்னம் தற்போது இயக்கி முடித்துள்ள, 'பொன்னியின் செல்வன்' படத்தில் விஜய் உட்பட பல முன்னணி பிரபலங்கள் நடிக்க இருந்த நிலையில், ஒரு சில காரணங்களால் அவர்களால் நடிக்க முடியாமல் போனது. அப்படி இந்த படத்தின் வாய்ப்பை தவற விட்ட 9 பிரபலங்கள் யார் யார் என்பதை பார்ப்போம்.  

2 Min read
Author : manimegalai a
Published : Jul 13 2022, 04:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

புல்லரிக்க வைக்கும் பிரமாண்ட காட்சிகளுடன் எடுக்கப்பட்டிருக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தை கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பே எடுக்க திட்டமிட்டிருந்தார் இயக்குனர் மணிரத்னம். ஆனால், பட்ஜெட் காரணமாக இப்படம் எடுக்க முடியாமல், இத்தனை வருடங்கள் தாமதமாகிக்கொண்டே சென்ற நிலையில், ஒருவழியாக தற்போது எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
211

ஒரு நாவலை, காட்சிப்படுத்தி திரைப்படமாக எடுப்பது  என்பது மிகவும் சவாலான விஷயம். அதிலும் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுப்பது என்பது அசாதாரணமான விஷயம்   இதனை தான் தற்போது பல தடங்கல்களை கடந்து செய்து முடித்துள்ளார் மணிரத்னம்.
 

311

பொன்னியின் செல்வன் கதையை படமாக எடுக்க முயன்ற போது, வந்திய தேவன் கதாபாத்திரத்திற்கு மணிரத்னம் முதலில் தேர்வு செய்தது தளபதி விஜய்யை தான். விஜய்க்கு கதை பிடித்து போனாலும், ஷூட்டிங் பணிகள் தாமதமாகி கொண்டே சென்றதால், இப்படத்திற்கு அதிக நாட்கள் கால்ஷீட் ஒதுக்க வேண்டி இருந்ததாலும் இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என கூறப்படுகிறது.

 மேலும் செய்திகள்: அபார திறமையால் அம்மா ரோஜாவையே மிஞ்சும் மகள்..! இளம் வயதிலேயே கிடைத்த மிக உயரிய விருது..!
 

411

விஜய்யை தொடர்ந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு, நடிகர் சூர்யாவுக்கு கிடைத்தது. ஆனால் சூர்யா அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வந்ததால், பொன்னியின் செல்வன் பட வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டார்.

511

நடிகர் விஜய் சேதுபதியிடம் கதை கூறப்பட்ட நிலையில்... தேதி பிரச்சனை காரணமாக அவராலும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிக்க முடியாமல் போனது.

 மேலும் செய்திகள்: ஜாரா மகள் அல்ல இன்னொரு தாய்... மகள் செய்த செயலால் கதறி அழுத அர்ச்சனா!! வைரலாகும் வீடியோ..
 

611

தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு 'பொன்னியின் செல்வன்' கதையை மணிரத்னம் கூறியபோது, அவருக்கு மிகவும் பிடித்து போனது. ஆரம்பத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட இவர், படத்தின் படப்பிடிப்பு தாமதமாகிக்கொண்டே சென்றதால், படத்தில் இருந்து விலகியதாக செய்திகள் வெளியானது.
 

711

நடிகை அனுஷ்காவும் குந்தவை அல்லது நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த நிலையில் படப்பிடிப்பு தாமதத்தின் காரணமாக இப்படத்தில் இருந்து அதிரடியாக விலகினார்.

 மேலும் செய்திகள்: பிரமாண்ட செட்... மிகப்பெரிய நட்சத்திர கூட்டணி... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' லேட்டஸ்ட் அப்டேட்!
 

811

அதே போல், தற்போது தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், அடுத்தடுத்த பட வாய்ப்புகளை இழக்க நேரிடும் என்பதால் இந்த படத்தில் ஒப்பந்தம் செய்ய பட்ட பின்னர் வெளியேறினார்.

911

மேலும், அமலாபால், சத்யராஜ், பார்த்திபன் போன்ற பிரபலங்களும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிக்க இருந்த நிலையில் ஒரு சில காரணங்களால் விலகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

1011

இப்படி சில பிரபலங்கள் இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டிருந்தாலும், கதாபாத்திரத்திற்கு ஏற்ற போல் நடிகர் நடிகைகளை தேர்வு செய்து  நடிக்க வைத்துவிட்டார் மணிரத்னம்.

மேலும் செய்திகள்:  துளியும் மேக்கப் இன்றி... மூன் லைட் வெளிச்சத்தில் மின்னும் நட்சத்திரமாய் மூட் அவுட் செய்யும் திவ்ய பாரதி!!

 

1111

கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம், செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சினிமா
விஜய் (நடிகர்)
ஐஸ்வர்யா ராய்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved