அபார திறமையால் அம்மா ரோஜாவையே மிஞ்சும் மகள்..! இளம் வயதிலேயே கிடைத்த மிக உயரிய விருது..!
பிரபல நடிகையும், தற்போதைய ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜாவின் மகள் அன்ஷு மாலிகா மிக சிறிய வயதில், தன்னுடைய திறமையை வெளிக்காட்டி பெற்றுள்ள விருதுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
நடிகர்களின் பிள்ளைகள் நடிகர்களாக தான் வரவேண்டும், என்கிற கண்ணோட்டத்தை தற்போதைய நடிகர் - நடிகைகள் மாற்றி வருகிறார்கள். தங்களுடைய பிள்ளைகள் என்னவாக வேண்டும் என்று விரும்புகிறார்களோ அதற்கான சுதந்திரத்தை அவர்களுக்கு வழங்குகிறார்கள்.
அந்த வகையில் நடிகை ரோஜாவின் மகளுக்கு நடிக்க வாய்ப்புகள் இருந்தும், அவர் தனக்கு பிடித்ததை விரும்பி செய்து அதில் வைரமாய் ஜொலிக்கிறார்.
மேலும் செய்திகள்: பிரமாண்ட செட்... மிகப்பெரிய நட்சத்திர கூட்டணி... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' லேட்டஸ்ட் அப்டேட்!
நடிகை ரோஜா - இயக்குனர் செல்வமணி ஆகிய நட்சத்திர தம்பதிகளின் மகளான அன்ஷு மாலிகா சமீப காலமாக வெப் டெவலப்பிங் மற்றும் கண்டெண்ட் ரைட்டிங் போன்றவற்றில் அதீத கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது மிக சிறந்த எழுத்தாளராக தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இவர் எழுதிய 'தி ஃப்ளேம் இன் மை ஹார்ட்', என்கிற புத்தகம் 'ஜி டவுன் என்ற இதழில் வெளியானதை தொடர்ந்து தற்போது தென்னிந்தியாவின் சிறந்த எழுத்தாளருக்கான விருதை தட்டி சென்றுள்ளார்.
மேலும் செய்திகள்: ஜாரா மகள் அல்ல இன்னொரு தாய்... மகள் செய்த செயலால் கதறி அழுத அர்ச்சனா!! வைரலாகும் வீடியோ..
இளம் வயதில் ஒரு எழுத்தாளராக விருது பெறுவது என்பது சாதாரண விஷயம் அல்ல, எனவே அன்ஷு மாலிகா, நடிகையும், அமைச்சருமான அம்மாவையே தன்னுடைய திறமையால் மிஞ்சி விடுவார் போல... என நெட்டிசன்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.
சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த விருது விழாவில் கலந்து கொண்டு, பிரபல பாலிவுட் நடிகை சஜன் கைகளால் விருது பெற்ற புகைப்படத்தை ரோஜாவின் மகள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்: ஐஸ்வர்யா ராய், நயன்தாரா, சமந்தா போன்ற 16 முன்னணி நடிகைகளின் அதிர்ஷ்டம் பொங்கும் ராசிகள் என்னென்ன தெரியுமா?
இதை தொடர்ந்து பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதே போல் மெகா ஸ்டார் சிரஞ்சீவி அன்ஷு மாலிகாவை அழைத்து பேசிய புகைப்படங்கள் சில வற்றையும் இவர் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.