பிரமாண்ட செட்... மிகப்பெரிய நட்சத்திர கூட்டணி... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' லேட்டஸ்ட் அப்டேட்!
'அண்ணாத்த' படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள 'ஜெயிலர்' படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், இந்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் யார் இயக்கத்தில் நடிப்பார்? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருந்தது.
இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் 'டாக்டர்' பட இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டது. 'ஜெயிலர்' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது.
மேலும் செய்திகள்: ஐஸ்வர்யா ராய், நயன்தாரா, சமந்தா போன்ற 16 முன்னணி நடிகைகளின் அதிர்ஷ்டம் பொங்கும் ராசிகள் என்னென்ன தெரியுமா?
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிக்கான செட் அமைக்கும் பணிகள், ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது அந்த பணிகள் விரைவில் நிறைவடைய உள்ளதாகவும், இந்த செட்டில் பல முக்கிய காட்சிகளை படமாக படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் 'ஜெயிலர்' படத்தின் ஸ்கிரிப்ட் குறித்து ரஜினிகாந்திடம் - நெல்சன் இறுதி கட்ட ஆலோசனைகள் நடத்தி வந்ததாகவும் கூறப்பட்டது.
மேலும் செய்திகள்: ஜாரா மகள் அல்ல இன்னொரு தாய்... மகள் செய்த செயலால் கதறி அழுத அர்ச்சனா!! வைரலாகும் வீடியோ..
தற்போது அந்தப் பணியையும் அவர் முடிந்து விட்டதாகவும், எனவே ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குவது உறுதி என சில நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து சிவராஜ்குமார், ஐஸ்வர்யாராய், பிரியங்கா மோகன், சிவகார்த்திகேயன், ரம்யா கிருஷ்ணன், போன்ற பல முக்கிய நடிகர் - நடிகைகள் இணைந்து நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதுகுறித்து தற்போது வரை எந்த வித அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
மேலும் செய்திகள்: திருமணத்தில் நயன்தாரா தோழிகளுக்கு நடுவே போஸ் கொடுத்த விக்கி..! மாப்பிள்ளை முகத்துல அப்படி ஒரு சந்தோஷம்..!
இப்படத்திற்கு அடுத்தடுத்து பல ஹிட் பாடல்களை கொடுத்து வரும், இசையமைப்பாளர் அனிருத் இசை அமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.