திருமணத்தில் நயன்தாரா தோழிகளுக்கு நடுவே போஸ் கொடுத்த விக்கி..! மாப்பிள்ளை முகத்துல அப்படி ஒரு சந்தோஷம்..!
நயன்தாரா - விக்கி ஜோடி அவ்வப்போது தங்களுடைய திருமண புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வரும் நிலையில், தற்போது நயன் தன்னுடைய திருமணத்தின் போது தோழிகளுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
சுமார் 7 வருட காதலுக்கு பின்னர் திருமண வாழ்க்கையில் ஒன்று சேர்ந்துள்ள விக்கி - நயன் ஜோடி தங்களுடைய பணிகளில் பிசியாகி விட்டாலும், அவ்வப்போது அவர்களை பற்றிய தகவல்களை ரசிகர்களுக்கு தெரிவிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
திருமணம் ஆகி ஒரு மாதம் ஆகப்போகும் நிலையில்... அடிக்கடி தங்களுடைய திருமண புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: மது பார்ட்டியில் மனைவி - மகளுடன் கலந்து கொண்டாரா அஜித்? விமர்சனத்திற்கு ஆளான புகைப்படம்..!
கடந்த ஒரு வாரமாகவே தினமும் பிரபலங்கள் மற்றும் தங்களுடைய நண்பர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை இந்த காதல் ஜோடி வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷாருகான், அட்லீ, ஆகியோர் பரிசுகளுடன் வந்து தன்னை வாழ்த்திய புகைப்படத்தை சமூக வலைதளத்தில் நயன் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டது.
மேலும் செய்திகள்: உள்ளாடை தெரியும் ட்ரான்ஸ்பரென்ட் உடையில்... ஒய்யார கவர்ச்சி காட்டும் பூஜா ஹெக்டே!! ரீசென்ட் போட்டோஸ்!
இதை தொடர்ந்து எவர் கிரீன் ஸ்டார் கப்பில் சூர்யா - ஜோதிகா மேட்சிங் மேட்சிங் உடையில் வந்து வாழ்த்திய புகைப்படத்தையும், நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய மனைவி ஜெசியுடன் வந்து வாழ்த்திய புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தனர்.
இதை தொடர்ந்து அனிருத், மற்றும் தன்னுடைய நண்பர்கள் வந்து வாழ்த்திய புகைப்படத்தை வெளியிட்ட இந்த ஜோடி தற்போது நயன் தோழிகள் வந்து வாழ்த்திய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
மேலும் செய்திகள்: அடேங்கப்பா... சென்னையில் மட்டும் இத்தனை கோடியா? 'விக்ரம்' படத்தின் மிரட்டல் வசூல்!
நயன்தாராவின் 6 தோழிகளுக்கு நடுவே விக்கி தன்னுடைய காதல் மனைவியுடன் போஸ் கொடுத்த போது, முகத்தில் பூரித்த புன்னகையுடன் உள்ளார். இந்த லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.