மது பார்ட்டியில் மனைவி - மகளுடன் கலந்து கொண்டாரா அஜித்? விமர்சனத்திற்கு ஆளான புகைப்படம்..!
நடிகர் அஜித் கடந்த சில தினங்களாக குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில், நண்பர்கள் சிலருடன் பார்ட்டியில் கலந்து கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.
நடிகர் அஜித் சமீபத்தில் இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு சுற்றுலா மனைவி, மற்றும் குழந்தைகளுடன் சுற்றுலா சென்றுள்ளார்.
அப்போது இவர் லண்டன் வீதிகளில் பைக்கு பயணம் செய்தது, கப்பலிலும் பயணம் மேற்கொண்டது மற்றும் கடைவீதிகளுக்கு பொருட்கள் வாங்க சென்றது போன்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டது.
மேலும் செய்திகள்: இயக்குனர் அமீரை சோகத்தில் ஆழ்த்திய இழப்பு..! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்..!
மேலும் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஈபிள் டவரை அஜித் சுற்றிப் பார்த்துள்ளார். அங்கு அஜித்தை பார்த்த ரசிகர்கள் அவருடன் போட்டி போட்டுகொண்டு புகைப்படங்கள் எடுத்து கொண்டுள்ளனர்.
அஜித் மிகவும் பொறுமையாக அனைத்து ரசிகர்களுடனும் புகைப்படம் எடுத்து கொண்டது மட்டும் இன்றி, ஆட்டோகிராப்பும் போட்டு கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்தார்.
மேலும் செய்திகள்: பிரபல தமிழ் நடிகர் திடீர் மரணம்..! திரையுலகினர் அதிர்ச்சி..!
இந்நிலையில் அஜித், தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் மது பார்ட்டியில் நண்பர்களுடன் கலந்து கொண்டுள்ளது போல் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறது.
அதே நேரம், அது அவரது தனி பட்ட விஷயம்... அவரது பிரைவர்சியில் தலையிடவோ, விமர்சிக்கவோ யாருக்கும் உரிமை இல்லை என, அஜித்தின் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: ஜொலிக்கும் கருப்பு நிற ஹாட் உடையில்... அந்த இடத்தை ஓப்பனாக காட்டி கவர்ச்சியில் உச்சம் தொட்ட மாளவிகா மோகனன்!
தற்போது அஜித், இயக்குனர் எச்.வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணியில் மூன்றாவதாக இணைந்து, AK 61 ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ள நிலையில், தனக்கு கிடைத்த ஓய்வு நாட்களை அஜித் மிகவும் மகிழ்ச்சியாக குடும்பத்துடன் செலவிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.