இயக்குனர் அமீரை சோகத்தில் ஆழ்த்திய இழப்பு..! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்..!

பிரபல இயக்குனர் அமீரின் தாயார் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம், அவரது குடும்பத்தினரை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
 

director ameer mother pass away

இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக இருந்து 'மௌனம் பேசியதே' படத்தின் மூலம் இயக்குனராக மாறியவர் அமீர். சில படங்களே இவர் இயக்கி இருந்தாலும், இவர் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது . மேலும், Teamwork Production House என்ற பெயரில் சொந்த படத்தயாரிப்பு படம் நிறுவனம் மூலம், ராம், யோகி போன்ற படங்களை தயாரித்திருந்தார்.

director ameer mother pass away

குறிப்பாக, அமீரின் இயக்கத்தில்... கடந்த 2007 ஆம் ஆண்டு கார்த்தி- பிரியாமணி நடிப்பில் வெளியான, 'பருத்திவீரன்' திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதே போல், இந்த படத்தின் நாயகியான... பிரியாமணிக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: மைனா நந்தினியை தொடர்ந்து... புதிய கார் வாங்கிய ஆஜித்! அட இத்தனை லட்சமா?

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருப்பது மட்டும் இன்றி நடிகராகவும் தனி முத்திரை பதித்துள்ளார். வடசென்னை, படத்தில் இவர் நடித்த கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதே போல்  சமீபத்தில் கூட தனுஷ் நடிப்பில் வெளியான 'மாறன்' திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அமீர். 

director ameer mother pass away

இந்நிலையில் தற்போது இவரது தாயார் பாத்துமுத்து பீவி, வயது மூப்பு காரணமாக வரும் உடல்நல பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் காலமானார். இதை தொடர்ந்து, அவரது உடல்... சென்னை கே கே நகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரபலங்கள் மற்றும் அவரது உறவினர்கள் இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அமீரின் தாயார் உயிரிழப்பு அமீர் மற்றும் அவரது குடும்பத்தினரின் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் செய்திகள்: 'கோப்ரா' ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு மாஸ் காட்டிய விக்ரம்... புகைப்பட தொகுப்பு!!
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios