'கோப்ரா' ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு மாஸ் காட்டிய விக்ரம்... புகைப்பட தொகுப்பு!!
நடிகர் விக்ரமுக்கு ஜூலை 8 ஆம் தேதி, மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பின்னர் அது சாதாரண நெஞ்சு வலி மட்டுமே என மருத்துவ அறிக்கையும் வெளியானது. விக்ரமின் உடல்நிலை சரி இல்லாத காரணத்தால், ஆடியோ வெளியீட்டு விழாவில் இவர் கலந்து கொள்வாரா? என கேள்வி எழுந்த நிலையில், இன்று நடந்த 'கோப்ரா' வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
நடிகர் விக்ரம் வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த போது, திடீர் என ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையே அதிர்ச்சியடைய வைத்தது.
ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர், விக்ரமின் உடல் நிலை குறைத்து நலம் விசாரித்து வந்த நிலையில், விக்ரமின் மேலாளர் மற்றும் மகன் துருவ் ஆகியோர் அவர் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்: ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில்... மஞ்சள் நிற பட்டுப்புடவை கட்டி... மல்கோவா மாம்பழம் போல் போஸ் கொடுத்த பிரியா ஆனந்த்!!
திடீர் உடல்நல குறைவு காரணமாக, 'பொன்னியின் செல்வன்' டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாத விக்ரம், இன்று நடைபெற உள்ள 'கோப்ரா' இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வாரா என கேள்வி எழுந்தது.
இந்நிலையில் தற்போது நடந்து வரும் கோப்ரா இசை வெளியீட்டு விழாவில் விக்ரம் கலந்து கொண்டுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் மேடை ஏறி பேசிய விக்ரம் தன்னுடைய உடல் நலனுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து உருக்கமாக பேசியுள்ளார்.
மேலும் செய்திகள்: 'யாரடி மோகினி' சீரியல் நடிகை நக்ஷத்திராவுக்கு நடந்த திடீர் திருமணம்! இது தான் காரணமாம்... வைரலாகும் புகைப்படம்
இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கே.ஜி.எஃப் பட நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் , மியா ஜார்ஜ் , ரோஷன் மேத்யூ , சர்ஜனோ காலித் , பத்மப்ரியா , முகமது அலி பெய்க் ,கனிஹா, மிர்னாலினி ரவி , மீனாட்சி, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
'கோப்ரா' படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இவர் இசையில் இப்படத்தில், தும்பித்துள்ளல், அதிரா, உயிர் உருகுதே, தரங்கிணி, ஏலே இளஞ்சிங்கமே ஆகிய ஐந்து பாடல்கள் இடம்பெற்றுள்ளது.
மேலும் செய்திகள்:மைனா நந்தினியை தொடர்ந்து... புதிய கார் வாங்கிய ஆஜித்! அட இத்தனை லட்சமா?
ஆடியோ வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரகுமான் இசை கச்சேரியும் மிக பிரமாண்டமாக நடந்துள்ளது தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் மூலம் தெரிகிறது.
'கோப்ரா' படத்திற்கு ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். யுவன் ஸ்ரீனிவாசன் எடிட்டிங் செய்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு தயாரிப்பிற்கு வந்த இந்த படத்தின் முதல் பார்வை அந்த ஆண்டே அறிவிக்கப்பட்டது. ஆனால் கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்: தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் ஜோடி ரூ.119 கோடிக்கு வாங்கியுள்ள குவாட்ரப்ளக்ஸ் அப்பார்ட்மெண்ட்! என்ன ஸ்பெஷல்?
விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள 'கோப்ரா' ஆகஸ்ட் 11 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மிக பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த படத்தை, அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். லலித் குமார் மற்றும் உதயநிதி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.