தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் ஜோடி ரூ.119 கோடிக்கு வாங்கியுள்ள குவாட்ரப்ளக்ஸ் அப்பார்ட்மெண்ட்! என்ன ஸ்பெஷல்?

நட்சத்திர தம்பதியான ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் ஜோடி பாந்த்ராவில் 119 கோடி குவாட்ரப்ளக்ஸ் அப்பார்ட்மெண்ட் ஒன்றை வாங்கியுள்ளனர். இது சல்மான் கான் மற்றும் ஷாருக்கானின் மன்னத் பக்கத்தில் உள்ளது.
 

Deepika Padukone and Ranveer Singh couple buy New Quadruplex Luxury Apartment

பாலிவுட் திரையுலகின் நட்சத்திர ஜோடியான தீபிகா - ரன்வீர் ஜோடி மும்பையின், முக்கிய பகுதியான பாந்த்ராவில் ரூ.119 கோடிக்கு ஆடம்பரமான பிளாட் ஒன்றை வாங்கியுள்ளனர். இதன் மூலம்  விரைவில் ஷாருக்கான் மற்றும் சல்மான் கானின் அண்டை வீட்டினராக இவர்கள் மாற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது தெரிவிக்கின்றன.

Deepika Padukone and Ranveer Singh couple buy New Quadruplex Luxury Apartment

மேலும் செய்திகள்: ஷாருக்கானின் 'ஜவான்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் விஜய்..! சம்பள விவகாரம் குறித்து வெளியான தகவல்..!

ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன், மும்பையின் நட்சத்திர நகரமாக இருக்கும் பாந்த்ராவில். 'lush residential tower' என்னும் குடியிருப்பு கோபுரத்தில் குவாட்ரப்ளக்ஸ் ஒன்றை வாங்கியுள்ளனர். இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலின் படி,  ரூ.119 கோடிக்கு அந்த பிளாட்டை இவர்கள் வாங்கியுள்ளனர். இவர்கள் வாங்கியுள்ள இந்த புதிய பிளாட்  நாட்டிலேயே மிக விலை உயர்ந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒன்று என கூறப்படுகிறது.

Deepika Padukone and Ranveer Singh couple buy New Quadruplex Luxury Apartment

மேலும் செய்திகள்: காதலுக்காக நிறைய பொய்... பித்தலாட்டம்!! தண்டனை அனுபவிக்க தயார் ஆகிறேன் - பாக்கியலட்சுமி கோபி வெளியிட்ட வீடியோ!

மேலும், இவர்கள் பிளாட் வாங்கியுள்ள இடம், சல்மான் கானின் கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்புக்கும் ஷாருக்கானின் மன்னத் பங்களாவுக்கும் இடையே அமைந்துள்ளது. கோபுரத்தின் 16வது, 17வது, 18வது மற்றும் 19வது தளங்களை ஒன்றிணைத்து இவர்களது குடியிருப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது. இது மொத்தம் 11,266 சதுர அடி கார்பெட் ஏரியா மற்றும் 1,300 சதுர அடி பிரத்தியேக மொட்டை மாடியைக் கொண்டுள்ளது. இங்கு ஒரு சதுர ஆதி ரூ.1 லட்சம் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் வருவாய்த்துறைக்கு பதிவு கட்டணம் மட்டும் ரூ.7.13 கோடியாம். இந்த கோபுரத்தின் பார்க்கிங் ஏரியாவில் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனுக்கு 19 வாகன நிறுத்துமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: சட்டை பட்டனை கழட்டி விட்டு... நீச்சல் குலத்தையே சூடேற்றும் பிக்பாஸ் ரைசா!! படு ஹாட் புகைப்படங்கள்..
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios