ஷாருக்கானின் 'ஜவான்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் விஜய்..! சம்பள விவகாரம் குறித்து வெளியான தகவல்..!
நடிகர் விஜய், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கும் 'ஜவான்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில், இவரது சம்பள விவகாரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
சமீப காலமாக முன்னணி நடிகர்கள் மற்ற நடிகர்களின் படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'விக்ரம்' படத்திலும், மாதவனின் 'ராக்கெட்ரி' படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்தார். இந்த இரு படங்களில் நடிப்பதாகவும் ஒரு ரூபாய் கூட சம்பளம் பெறாமல் சூர்யா நடித்தார் என்ற செய்திகள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆனது.
தற்போது சூர்யா பாணியிலேயே நடிகர் விஜயும் ஒரு ரூபாய் சம்பளம் கூட வாங்காமல், ஷாருக்கான் - அட்லீ கூட்டணியில் உருவாகும் 'ஜவான்' படத்தில், சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து மூன்று முறை, விஜய்யை வைத்து இயக்கிய அட்லீ நீண்ட இடைவெளிக்கு பின்னர், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வைத்து 'ஜவான்' படத்தை இயக்கி வருகிறார். நயன்தாரா ஹீரோயினாக நடிக்கும் இப்படம் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி நிலையில், அவ்வபோது இந்த படம் குறித்த செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது.
மேலும் செய்திகள்: காதலுக்காக நிறைய பொய்... பித்தலாட்டம்!! தண்டனை அனுபவிக்க தயார் ஆகிறேன் - பாக்கியலட்சுமி கோபி வெளியிட்ட வீடியோ!
சமீபத்தில் கூட இந்த படத்தில் இருந்து ஷாருக்கானின் ஃபர்ஸ்ட் லுக், மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், வருகிற செப்டம்பர் மாதம் 'ஜவான்' பட குழுவினர், சென்னையில் சுமார் 25 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அப்போது விஜய் ஒரே ஒரு நாள் மட்டும் சூட்டிங்கில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்: விஜய் சேதுபதி மனைவியா இது? நயன்தாரா - விக்கி திருமணத்தில் ஜோடியாக கலந்து கொண்டு வாழ்த்திய புகைப்படம் வைரல்!!
அட்லி - ஷாருக்கான் இருவருமே விஜய்க்கு நல்ல நண்பர்கள் என்பதால், விஜய் இப்படத்தில் நடிக்க சம்பளம் எதுவும் வாங்காமல் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இப்படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக ராணா டகுபதியை நடிக்க வைக்க படக்குழு அணுகிய நிலையில், அவர் பல படங்களில் பிசியாக இருப்பதால், அந்த வாய்ப்பு நடிகர் விஜய் சேதுபதிக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்: சட்டை பட்டனை கழட்டி விட்டு... நீச்சல் குலத்தையே சூடேற்றும் பிக்பாஸ் ரைசா!! படு ஹாட் புகைப்படங்கள்..