MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • காதலுக்காக நிறைய பொய்... பித்தலாட்டம்!! தண்டனை அனுபவிக்க தயார் ஆகிறேன் - பாக்கியலட்சுமி கோபி வெளியிட்ட வீடியோ!

காதலுக்காக நிறைய பொய்... பித்தலாட்டம்!! தண்டனை அனுபவிக்க தயார் ஆகிறேன் - பாக்கியலட்சுமி கோபி வெளியிட்ட வீடியோ!

பாக்கியலட்சுமி சீரியலில் கடந்த இரண்டு வாரங்களாக எதிர்பாராத பல திருப்பங்கள் ஏற்பட்டுவரும் நிலையில், இந்த சீரியலின் நாயகன் கோபி பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Jul 11 2022, 11:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்குமே... ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக தற்போது பாக்கியலட்சுமி சீரியல் எதிர்பாராத திருப்பங்களுடன் சென்றுகொண்டிருக்கிறது .

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

இத்தனை நாள், ராதிகாவிடம் தன்னுடைய மனைவி பாக்கியா என்பதை மறைத்தும், தனக்கு இன்னொரு குடும்பம் உள்ளது என்பதை பாக்கியாவிடம் மறைத்தும் வாழ்ந்து வந்த கோபி வசமாக சிக்கியுள்ளார்.

மேலும் செய்திகள்: விஜய் சேதுபதி மனைவியா இது? நயன்தாரா - விக்கி திருமணத்தில் ஜோடியாக கலந்து கொண்டு வாழ்த்திய புகைப்படம் வைரல்!!
 

38

கோபிக்கு விபத்து ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் இருக்கும் போது ராதிகா, மருத்துவமனைக்கு வந்து கோபியை பார்க்கிறார். நான் தான் கோபியின் மனைவி என அவருடைய மருத்துவ செலவுக்கான பணத்தையும் செலுத்துகிறார். மேலும் இருவரும் பேசியதை பாக்கியா பார்த்து விடுவது மட்டும் இன்றி, டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்த கோபியிடம் பல கேள்விகளை கேட்டு குற்றவாளியாக்குகிறார்.

48

கோபி என்ன பதில் சொல்வது என திகைத்து நிற்கிறார். எனவே இதற்க்கு மேல் மீண்டும் கோபியுடன் சேர்ந்து பாக்கியா வாழ்வாரா? அல்லது வீட்டை விட்டு வெளியேறுவாரா என ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: நயன் - விக்கி திருமணத்திற்கு மேட்சிங்... மேட்சிங்.. உடையில் வந்து அசத்திய சூர்யா - ஜோதிகா!! செம்ம கியூட்...
 

58

அதே போல்... கணவனை விட்டு பிரிந்து கோபியை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள நினைத்த ராதிகா திருமணம் செய்து கொள்வாரா? என்பது போன்ற கேள்விகளும் எழுந்து வருகிறது.

68

இப்படி சீரியல் அதிரடியான திருப்புமுனைகளுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில், கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டு மிகவும் உருக்கமாக பேசியுள்ளார்.

மேலும் செய்திகள்: சட்டை பட்டனை கழட்டி விட்டு... நீச்சல் குலத்தையே சூடேற்றும் பிக்பாஸ் ரைசா!! படு ஹாட் புகைப்படங்கள்..
 

78

அந்த வீடியோவில், அனைவருக்கும்  காலை வணக்கம் கூறிபேச தொடங்கும் கோபி, தொடர்ந்து ஆதரவு தரும் ரசிகர்களுக்கு நன்றி என கூறுகிறார். தொடர்ந்து பேசுகையில்...  "அடுத்து 1 வாரத்திற்கு செய்த தப்புக்கு குற்றவாளியாக தண்டனை அனுபவிக்க தயார் ஆகுகிறேன். பாவம் கோபி என்ன பண்ண முடியும். காதலுக்காக  நிறைய பொய் பித்தலாட்டங்களை செய்து இருக்கிறார். அதற்கு அனுபவிச்சு தான் ஆகணும். வயசானால் காதல் பண்ண கூடாது, அப்படியெல்லாம் சட்டம் இருக்கு,  என்ன பண்ணுவது...ஓகே  நன்றி” என கூறி தன்னுடைய வீடியோவை முடித்துள்ளார். 

88

ஏற்கனவே படு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியல் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்யும் விதமாகவே தற்போது இந்த வீடியோவை சதீஷ் வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Silambarasan Video : “யார் பெத்த புள்ளையோ?” – வைரலாகும் சிம்புவின் இன்ஸ்டா வீடியோ
Recommended image2
Indrans : பணிவாக இருப்பது போல் நடிக்கிறேனா? விமர்சனங்களுக்கு தரமான பதிலடி கொடுத்த கருப்பு பட நடிகர் இந்திரன்ஸ்
Recommended image3
This Week OTT Releases : ஜூன் முதல் வாரத்தில் ஓடிடியில் செம ட்ரீட் வெயிட்டிங் - அடேங்கப்பா இத்தனை படங்கள் ரிலீஸா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved