ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில்... மஞ்சள் நிற பட்டுப்புடவை கட்டி... மல்கோவா மாம்பழம் போல் போஸ் கொடுத்த பிரியா ஆனந்த்!!
எந்த உடை அணிந்தாலும் அதில், அழகு தேவதை போல் மின்னும் பிரியா ஆனந்த், தற்போது மஞ்சள் நிற பட்டு புடவையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
பிரபல தமிழ் பட நடிகை பிரியா ஆனந்தின் பேஷன் சென்ஸ் எப்போதுமே டாப் தான். மாடர்ன் உடையாக இருகாலும், புடவையாக இருந்தாலும் நேர்த்தியாக தனக்கு பொருந்த கூடிய உடைகளை மட்டுமே தேர்வு செய்து போடுவது இவரது மிகப்பெரிய பிளஸ் எனலாம்.
அந்த வகையில் சமீபத்தில், பிரியா பாரம்பரிய உடையான பட்டு சேலையில் வெளியிட்ட புகைப்படங்கள்... வேறு லெவலுக்கு அவரது ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்: மைனா நந்தினியை தொடர்ந்து... புதிய கார் வாங்கிய ஆஜித்! அட இத்தனை லட்சமா?
அழகிய மஞ்சள் நிற புடவையில், அதற்க்கு ஏற்ற போல் கொஞ்சம் ஸ்டைலிஷாக ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து, பார்ப்பதற்கு மல்கோவா மாம்பழம் போல் இருந்தார்.
மேலும் அழகிற்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக தலை நிறைய பூ வைத்து, சேலைக்கு ஏற்ற போல் தங்க நிற நெக் செட் மற்றும் ஜிக்கி அணிந்திருப்பது அசத்தல்.
மேலும் செய்திகள்: தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் ஜோடி ரூ.119 கோடிக்கு வாங்கியுள்ள குவாட்ரப்ளக்ஸ் அப்பார்ட்மெண்ட்! என்ன ஸ்பெஷல்?
இந்த புகைப்படத்தை வெளியிட்டு அவர் கூறியுள்ளதாவது “பல வருடங்களுக்கு முன்பு இன்று நான் வாமனன் மூலம் அறிமுகமானேன்! என்னுடன் இந்தப் பயணத்தில் ஒரு பகுதியாக இருந்த உங்கள் ஒவ்வொருவருக்கும் மனம் நிறைந்த இதயத்துடன் நான் நன்றி கூறுகிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் இயக்குனர் அகமது இப்ராஹிம், அரவிந்த் கிருஷ்ணா மற்றும் இஷ்யுவன் ஆகியோருக்கு தனக்கு வாய்ப்பு கொடுத்தமைக்கு பிரியா ஆனந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்: காதலுக்காக நிறைய பொய்... பித்தலாட்டம்!! தண்டனை அனுபவிக்க தயார் ஆகிறேன் - பாக்கியலட்சுமி கோபி வெளியிட்ட வீடியோ!
இவரது இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது, அதே போல் ரசிகர்கள் பலர் ப்ரியா ஆனந்தின் அடுத்த படத்திற்காக காத்திருப்பதாகவும், அவர் மிகவும் அழகானவர் என்றும் கூறி லீக்குகளையும், காமெண்ட்ஸையும் தெரிவித்து வருகிறார்கள்.