பிரபல தமிழ் நடிகர் திடீர் மரணம்..! திரையுலகினர் அதிர்ச்சி..!
'அவன் இவன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த, நடிகர் ராம்ராஜ் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம், திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் பாலா இயக்கத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு விஷால் - ஆர்யா இருவரும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் 'அவன் இவன்'. இந்த படத்தில், யாரும் திருட கூடாது என கிடா வெட்டி விருந்து வைத்து, சத்தியம் வாங்கும் போலீஸ் அதிகாரியாக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் நடிகர் ராமராஜ். அறிமுகமான முதல் படத்திலேயே இவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது மட்டும் இன்றி, அடுத்தடுத்து சில பட வாய்ப்புகளையும் பெற்று தந்தது.
மேலும் செய்திகள்: ரன்பீர் கபூருடன் குக் வித் கோமாளி' ஷிவாங்கி... விஜய் டிவியில் இருந்து பாலிவுட் வரை போயிட்டாங்களே..!
இந்நிலையில், 72 வயதாகும் இவர் உடல்நல குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது திடீர் மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இவரது உடல் அவரது சொந்த ஊரான முதுகுளத்தூருக்கு கொண்டு செல்லப்பட்டு, குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலிக்கு பின்னர், இன்று மாலை இறுதி சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்: ஜொலிக்கும் கருப்பு நிற ஹாட் உடையில்... அந்த இடத்தை ஓப்பனாக காட்டி கவர்ச்சியில் உச்சம் தொட்ட மாளவிகா மோகனன்!
வங்கி மேலாளரான இவர், தன்னுடைய பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர்... சினிமாவில் நடிக்க துவங்கினார். முதல் படத்திலேயே பாலாவின் பட வாய்ப்பு கிடைத்தது இவரது அதிர்ஷ்டம் என்றே கூற வேண்டும். இதை தொடர்ந்து நடித்த படங்கள் பெரிதாக பேசப்படவில்லை என்றாலும், 'அவன் இவன்' இவரது மாஸ்டர் பீஸ் என்று கூறும் அளவிற்கு எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றார். தற்போது இவரது திடீர் மரணத்திற்கு தொடர்ந்து சமூக வலைத்தளம் மூலம் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: 'கோப்ரா' ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு மாஸ் காட்டிய விக்ரம்... புகைப்பட தொகுப்பு!!