அனைவரும் ஏன் 'கார்கி' படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும்? விமர்சனம் இதோ..!
நடிகை சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள 'கார்கி' படம் நாளை வெளியாக உள்ள நிலையில், இந்த படம் குறித்து வெளியாகியுள்ள விமர்சனங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
நாளை ஜூலை 15-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள 'கார்கி' படத்தின் பிரீமியர் ஷோ திரையிடப்பட்ட நிலையில், தற்போது இப்படம் குறித்த விமர்சனங்கள் வெளியாகத் துவங்கியுள்ளது.
அந்த வகையில், சமூகத்தில் அவ்வபோது அரங்கேறி வரும் முக்கிய பிரச்சனையை இப்படம் தோலுரித்து காட்டியுள்ளது. 'கார்கி' படத்தை எந்த ஒரு சினிமா தனமும் இல்லாமல், மிகவும் இயல்பாக இயக்கியுள்ளார் இயக்குனர் கௌதம் ராஜேந்திரன். குறிப்பாக நாளுக்கு நாள் பெண்கள் முதல் குழந்தைகள் வரை எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினையை இப்படம் பேசியுள்ளது.
மேலும் செய்திகள்: சூடு பிடிக்கும் பிக்பாஸ் சீசன் 6 பணிகள்! பிரபல தொகுப்பாளரை களமிறக்கும் விஜய் டிவி! உறுதியான இரு போட்டியாளர்கள்
நான்கு வடமாநில இளைஞர்களால் 9 வயது குழந்தை கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவுக்கு ஆளாகிறார். அந்த வழக்கில் பள்ளி ஆசிரியையாக நடித்திருக்கும் சாய் பல்லவியின் தந்தை சிக்கி கைதாகிறார். இதனால் ஒரு நடுத்தர குடும்பம் எப்படிப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ளுகிறது. எப்படி பட்ட மன உளைச்சல்களுக்கு ஆளாகிறது என்பதையும், இவை அனைத்தையும் கடந்து தன்னுடைய அப்பாவை சாய் பல்லவி சட்ட ரீதியாக நிரபராதி என நிரூபித்து, காப்பாற்றினாரா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை.
துளியும் மேக்அப் இல்லாமல் சாய்பல்லவியை மிகவும் எதார்த்தமான, எளிமையான, பெண்ணாக நடித்துள்ளார். இந்த அழுத்தமான திரைக்கதைக்கு இவரை விட்டால் வேறு யாரும் பொருந்த முடியாது என்கிற நினைப்பே மனதில் வந்து நிற்கிறது. அதேபோல் பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ள காளி வெங்கட் இப்படத்தில் வழக்கறிஞராக வந்து தன்னுடைய நடிப்பை தத்ரூபமாக வெளிப்படுத்தியுள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஜெயப்பிரகாஷ், ஐஸ்வர்யா லட்சுமி , போன்ற பல நடித்துள்ளனர்.
மேலும் செய்திகள்: படுக்கை அறையில்... மேலாடையில் ஒற்றை கொக்கியை மட்டும் போட்டு எல்லை தாண்டிய கவர்ச்சியில் பிரியா வாரியர்!
அதேபோல் திருநங்கைகள் படித்து முன்னேறி நீதிபதியாக கூட வந்தாலும்... அவர்களை இந்த சமூகம் எப்படி பார்க்கிறது? ஒருவர் தவறுதலாக வழக்கில் சிக்கினால் அவர்கள் குடும்பம் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும், மீடியா அவர்களை எப்படி சித்தரித்து பேசுகிறது... என்பது பற்றியும் இப்படம் அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளது. மொத்தத்தில் கார்கி படம் அனைவரும் பார்க்க வேண்டிய சிறந்த படம் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது. இந்தப் படத்தை, தொடர்ந்து தரமான கதைகளை தேர்வு செய்து தயாரித்து வரும் சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
கார்கி படம் குறித்த ட்விட்டர் விமர்சனங்கள் இதோ...