ஒரே ஷாட்டில் எடுத்த படம்... பார்த்திபனின் விடா முயற்சிக்கு விஸ்வரூப வெற்றி கிடைத்ததா? - இரவின் நிழல் விமர்சனம்
பார்த்திபன் இயக்கத்தில் பிரிகிடா, வரலட்சுமி சரத்குமார், ரோபோ ஷங்கர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இரவின் நிழல் படத்தின் டுவிட்டர் விமர்சனம் இதோ.
சினிமாவில் ஒரே டேக்கில் ஒரு 5 நிமிட காட்சியில் நடித்தாலோ அல்லது ஒரு பாடல் காட்சியில் 2 நிமிடங்கள் நிற்காமல் ஆடினாலே பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கையில் ஒரு படத்தையே ஒரே ஷாட்டில் படமாக்கி, அதுவும் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமாக கொடுத்து உலக சினிமா பிரபலங்களே வியந்து பார்க்கும் அளவுக்கு ஒரு மாபெரும் படைப்பை கொடுத்திருக்கிறார் பார்த்திபன்.
இப்படம் இன்று உலகமெங்கும் ரிலீசாகி உள்ளது. பார்த்திபன் இயக்கிய படங்களில் அதிகாலை காட்சி போடப்பட்ட முதல் படம் இரவின் நிழல் தான். ரசிகர்களிடம் இப்படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பை கருத்தில் கொண்டு இன்று தமிழகம் முழுவதும் அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்டன. படத்தை பார்த்த ரசிகர்கள் டுவிட்டர் வாயிலாக தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... சூர்யாவுக்கு கமல் கொடுத்த ‘ரோலெக்ஸ் வாட்ச்’ பரிசல்ல.. பொக்கிஷம்- அதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய சீக்ரெட் இருக்கா
நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளதாவது : இரவின் நிழல் அருமையான படம். லைட்டிங், கேமரா, கலைப் பணிகள் அனைத்தும் தரம். பின்னணி இசை மிகப்பெரிய ப்ளஸ் ஆக அமைந்துள்ளது. அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளார்கள். சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் என்பதால் எமோஷனலா கனெக்ட் ஆகல. இருந்தாலும் சினிமா பிரியர்கள் தவறாமல் பார்க்க வேண்டிய படம் என குறிப்பிட்டுள்ளார்
படம் குறித்து மற்றொருவர் போட்டுள்ள பதிவில், “இரவின் நிழல், பார்த்திபனின் அற்புதமான யோசனை. சாதாரண மனிதனால் இப்படி ஆராய்ச்சி செய்து படம் எடுக்க இயலாது. தமிழ் சினிமா இருட்டில் இருந்தது, பார்த்திபன் எனும் ஒளி வெளிச்சம் இருளைபோக்கி நிழலை நமக்கு காட்டியிருக்கிறார் என குறிப்பிட்டு படத்துக்கு 10-க்கும் 9 மதிப்பெண்ணும் கொடுத்துள்ளார்.
மற்றொரு பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது : “படம் நல்லா இருக்கு நம்மதான் சப்போர்ட் பண்ணனும் இது மாறி புதுசா அப்பத்தான் கிடைக்கும் பார்த்திபன் சார் வேற லெவல் ஆக்டிங். கமர்சியல் ஆடியன்ஸுக்கும் பிடிக்கும்” என பதிவிட்டுள்ளார்.
படம் குறித்து நெட்டிசன் பதிவிட்டுள்ள மற்றொரு பதிவில், “வொர்த்தான படம், உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படத்தை கொடுத்து இந்திய சினிமா, தமிழ் சினிமா மற்றும் உலகசினிமாவுக்கே பெரும் ஊந்துகோளாக இருந்துள்ளார் பார்த்திபன். ஏ.ஆர்.ரகுமானின் இசை வியப்பை ஏற்படுத்துகிறது” என பாராட்டி உள்ளார்.
மற்றொருவர், “பார்த்திபன் நந்துவாக நடித்து அசத்தி இருக்கிறார். மேக்கிங் வீடியோ புல்லரிக்க வைக்கிறது. ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசை படத்துக்கு முதுகெலும்பாக உள்ளது. பிரிகிடா நடிப்பு சூப்பர். அனைத்து கேரக்டர்களும் சிறப்பாக நடித்துள்ளார்கள். கேமரா மேனுக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும். பார்த்திபனுக்கு ஆஸ்கர் விருது கொடுக்கனும். கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... விஜய்யின் சொகுசு கார் வழக்கு பின்னணி என்ன?... உயர்நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்தது ஏன்? - முழு விவரம்
மேற்கண்ட விமர்சனங்களை பார்க்கும் போது இப்படம் பார்த்திபனுக்கு ஒரு விஸ்வரூப வெற்றியை கொடுக்கும் படமாக அமைந்துள்ளது என்பது தெரியவருகிறது. ரசிகர்களின் விருப்பப்படி அவருக்கு ஆஸ்கர் விருதோ, தேசிய விருதோ கிடைக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.