- Home
- Cinema
- 31 கோடியில் 4BHK! நயன்தாரா - விக்னேஷ் சிவனின் கனவு இல்லம் ரெடி! போயஸ் கார்டனில் குடியேறும் தம்பதி?
31 கோடியில் 4BHK! நயன்தாரா - விக்னேஷ் சிவனின் கனவு இல்லம் ரெடி! போயஸ் கார்டனில் குடியேறும் தம்பதி?
Nayanthara New House Poes Garden Price: நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் ரூபாய் 31 கோடி மதிப்பில் 4 BHK வீடு வாங்கியுள்ளதாகவும், அதுவும் ரஜினி மற்றும் தனுஷின் பக்கத்து வீட்டில் குடியேற இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

நயன்தாரா
இந்திய அளவில் நடிகையாக வலம் வருபவர் இவர் உருவம் மட்டுமே அது யார் என்றால் நம் நயன்தாரா. பெண்ணாக இருந்து இந்திய முழுவதிலும் சினிமா துறையில் கொடி கட்டி பறக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார், தனது தனித்துவமான நடிப்பு மற்றும் வணிக ரீதியாக வெற்றி பெறும் திரைப்படங்களின் மூலம் “லேடி சூப்பர் ஸ்டார்” என்ற பட்டத்தையும் ரசிகர்களிடமிருந்து பெற்றுள்ளார்.
ஆனால் அவருக்கு அந்த பட்டம் பெற நான் இன்னும் முளைக்க வேண்டும் என்றும் என்னை பட்டத்தை வைத்து கூப்பிட வேண்டாம் என்றும் ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார். தென்னிந்திய சினிமாவில் நிலையான இடத்தைப் பிடித்துள்ளார். தற்போது அட்லி இயக்கும் படத்தில் கூட நயன்தாரா நடிப்பதாக சொல்லப்படுகிறது. அதிக சம்பளம் வாங்கும் நடிகை: நயன்தாரா தமிழ் திரையுலகில் தற்போது மிகவும் அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் ஒருவராகவும் கருதப்படுகிறார்.
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதி:
நயன்தாராவுக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். உயிர் உயிர் உலக் என்னும் இரு ஆண் குழந்தைகள் உள்ளனர் தற்போது அவர்கள் மிக வேகமாக வளர்ந்து மிக அருமையாகவே இருக்கின்றனர். நயன் அடுத்ததாக மூக்குத்தி அம்மன் பாகம் 2, மண்ணாங்கட்டி, டாக்ஸிக்,உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். விரைவில் இவை திரைக்கு வர இருக்கின்றன. நயன் தாராவை பொறுத்தவரை அவரது திரைத்துறை மற்றும் வாழ்க்கையிலும் என்ன விஷயங்கள் நடக்கின்றது என்பதை அனைத்து ரசிகர்களுக்கும் தெரிய வருகின்றன.
போயஸ் கார்டனில் வீடு வாங்குவது கௌரவம்:
பொதுவாக சினிமா வட்டத்துறையில் இருப்பவர்களுக்கு போயஸ் கார்டனில் வீடு வாங்குவது ஒரு கௌரவமாகவும் பெருமையாகவே எடுத்துக் கொள்கின்றனர். இந்த ஒரு நடிகர் நடிகையும் பணம் சம்பாதித்து போயஸ் கார்டனில் வீடு வாங்கி அங்கு வாழ வேண்டும் என்பது அவர்களுக்கு வழக்கமாகவே இருந்து வருகிறது. மிகப் புகழ்பெற்ற பணக்காரர்கள் கொண்ட ஏரியாவாக போயஸ் கார்டன் திகழ்கிறது. அந்த வரிசையில் தனுஷ், ரஜினிகாந்த், ஜெயலலிதா போன்ற பிரபல நடிகர்கள் மற்றும் நடிகைகள் வீடு வாங்கி செட்டிலாயும் இருக்கின்றனர். ஆனால் அந்தப் பகுதியில் மக்கள் தொகை சற்று குறைவாகவே இருக்கும். ஏனென்றால் ஒரு கிரவுண்டின் விலையே பல லட்சங்களில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இடத்தில் யார் இருக்கிறார்? யார் வீடு கட்டியுள்ளார் என்று பார்த்து அந்த இடத்தின் மதிப்பை அளவிடுவார்கள் என்று சொல்லப்படுகிறது.
மாநிலத்திற்கு ஒரு வீடு:
நயன்தாரா இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார் ஆகையால் அந்தந்த படபிடிப்புக்கு செல்லும் பொழுது அங்கங்கே ஒரு வீடு வாங்கியிருக்கிறார் என்று சினிமா வட்டாரத்துறையில் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் இவர் கேரளா, சென்னை ஹைதராபாத் என பல ஊர்களில் சொந்தமாக இவர் மாட மாளிகையும் அடுக்குமாடி வீடுகளும் வைத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. போயஸ் கார்டனில் ஏற்கனவே ஒரு வீடை வாங்கி அது மாளிகையாக தயாரித்து வைத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் தனது கணவர் விக்னேஷ் சிவனுக்கு அங்கு அலுவலகமும் இருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போதும் அவர் ரூபாய் 31 கோடி மதிப்பில் ஒரு புதிய வீடு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
புதிய வீடு:
லெகசி திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த அபார்ட்மெண்ட், Zapkey அணுகிய சொத்து பதிவு ஆவணங்களின்படி ரூ.31.5 கோடி மதிப்புடைய 4BHK இரண்டு மாடி கட்டிடம் வீட்டை நயன்தாரா வாங்கியுள்ளார்.14,369 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது. இவருடைய சொத்து மதிப்பு பல கோடிகளைக் கொண்டதாகவும் சொல்லப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக வாங்கியிருக்கும் போயஸ் கார்டன் வீட்டிற்கு விரைவில் குடியேற இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.