விஜய்யின் சொகுசு கார் வழக்கு பின்னணி என்ன?... உயர்நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்தது ஏன்? - முழு விவரம்
Actor Vijay : நடிகர் விஜய் 2019-ம் ஆண்டு ஜனவரிக்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட காருக்கான வரியை முழுமையாக செலுத்தி இருந்தால் அவருக்கு அபராதம் விதிக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு நுழைவு வரி கட்டாயம் செலுத்த வேண்டும். அந்த வகையில் நடிகர் விஜய் கடந்த 2005-ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்த காருக்கு நுழைவு வரி செலுத்தக் கோரி வணிகவரித்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து நுழைவு வரி வசூலிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என நீதிமன்றம் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து நடிகர் விஜய் தரப்பு நுழைவு வரியை செலுத்தியது. வரி செலுத்தாக இடைப்பட்ட காலத்திற்கான அபராதமாக நடிகர் விஜய் ரூ.30 லட்சத்து 23 ஆயிரத்து 650 செலுத்த வேண்டும் என வணிகவரித்துறை கடந்த 2021-ம் ஆண்டும் மீண்டும் ஒரு உத்தரவு பிறப்பித்தது.
இதையும் படியுங்கள்... நடிகை ராதிகாவை ஆசை ஆசையாய் காதலித்து திருமணம் செய்த பிரதாப் போத்தன்... ஒரே ஆண்டில் விவாகரத்து செய்தது ஏன்?
இதை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது வாதிட்ட விஜய் தரப்பு வழக்கறிஞர், கார் இறக்குமதி செய்யப்பட்டதில் இருந்து மாதத்திற்கு இரண்டு சதவீதம் என கணக்கிட்டு அபராதம் விதிக்கப்பட வேண்டும், ஆனால் வணிகவரித்துறையோ 400 சதவீதம் அபராதம் விதித்துள்ளதாக வாதத்தை முன்வைத்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி நடிகர் விஜய் 2019-ம் ஆண்டு ஜனவரிக்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட காருக்கான வரியை முழுமையாக செலுத்தி இருந்தால் அவருக்கு அபராதம் விதிக்கக்கூடாது எனவும், 2019 ஜனவரிக்கு பின்னும் அபராதம் செலுத்தாமல் இருந்தால் மட்டுமே அபராதம் விதிக்கப்பட வேண்டும் எனக்கூறி வழக்கை முடித்து வைத்தது.
இதையும் படியுங்கள்... Pratap Pothen: தனிமையில் வாழ்ந்து உயிரிழந்த பிரதாப் போத்தனுக்கு...ராதிகாவுடன் எந்த படத்தில் காதல் மலர்ந்தது.?