மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதித்திட்டத்தில் மாதம் ரூ.1000 பெற மாணவிகள் விண்ணப்பித்தற்கான கால அவகாசம் ஜூலை 18 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் இந்தாண்டு முதல் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்திற்கு தகுதியுடைய மாணவிகள் விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. கடந்த ஜூன் 25 ஆம் தேதி முதல் இந்த முகமானது நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க:BJP யினரால் அசிங்கபட்ட அண்ணாமலை? கல்லூரியில் அனுமதி வாங்காமல் 'அண்ணாமலையுடன் செல்பி' நிகழ்ச்சிக்கு இன்விடேசன்
மேலும் மாணவிகளின் வங்கிக் கணக்கு விவரங்கள், பயின்ற அரசுப் பள்ளி விவரங்கள், மாணவிகள் ஆதாா் நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல் ஆகிய விவரங்கள் பெறப்பட்டு, பதிவு செய்யும் பணியானது நடைபெற்று வருகிறது.
கடந்த ஜூன் 31 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், பின்னர் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் மாணவிகள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் இத்திட்டத்தில் விண்ணப்பம் செய்வதற்கான காலம் அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசுபள்ளிகளில் பயின்ற மாணவிகள் வரும் ஜூலை 18 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:எது தாழ்ந்த சாதி ? சர்ச்சையில் சிக்கிய பெரியார் பல்கலை.. தமிழக அரசு அதிரடி உத்தரவு !
இது குறித்து உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,” கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் இது வரை 3.58 லட்சம் மாணவிகள் விண்ணபித்து உள்ளனர். இதற்கான கடைசி தேதி கடந்த 10 ம் தேதி வரை என கூறப்பட்டது. இந்நிலையில் இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வரும் 18 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
