MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அசிங்கமா இல்லையா அண்ணே.. விஜய்யை விடாது கருப்பாய் துரத்தும் பிக் பாஸ் ஜூலி!

அசிங்கமா இல்லையா அண்ணே.. விஜய்யை விடாது கருப்பாய் துரத்தும் பிக் பாஸ் ஜூலி!

TVK Vijay: அண்ணன் இங்கு பேசினால் ஜி சொல்லி சிபிஐ வந்து குடுமியை பிடித்து ஆட்டி வைத்துவிடும். அதனால் அவர் பேச மாட்டார் என தவெக தலைவர் விஜயை ஜூலி மீண்டும் வம்புக்கு இழுத்துள்ளார்.

2 Min read
Author : vinoth kumar
Published : Mar 18 2026, 10:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தவெக Vs ஜூலி
Image Credit : Facebook

தவெக Vs ஜூலி

ஜூலி என்பவர் பிக் பாஸ் தமிழ் சீசன் பங்கேற்று பிரபலமானவர். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மெரினா கடற்கரையில் ஆர்வத்துடன் பங்கேற்று வீடியோக்கள் வைரலானதால் முதலில் அறியப்பட்டார். பின்னர் ரியாலிட்டி ஷோவில் நுழைந்து, சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். அண்மையில் தவெக தலைவர் விஜய்க்கு எதிராக தொடர்ச்சியாக ஜூலி வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

25
ஜூலிக்கு தவெகவில் இருந்து பதிலடி
Image Credit : X

ஜூலிக்கு தவெகவில் இருந்து பதிலடி

தவெக தலைவரும், நடிகருமான விஜய் கடந்த மாதம் வேலூரில் நடந்த பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது பேசிய விஜய் காளை மாடு தொடர்பாக குட்டி ஸ்டோரி ஒன்றை சொன்னார். அவரது குட்டி ஸ்டோரிக்கு வழக்கம்போல் அவருடைய ரசிகர்களும், கட்சியினரும் விசில் அடித்து அரவாரம் செய்தனர். ஆனால் பிக்பாஸ் ஜூலியோ வீடியோ வெளியிட்டு விஜயை சீண்டினார். இதற்கு தவெகவின் விர்ச்சுவல் வாரியர்ஸ் பதிலடி கொடுத்தது மட்டுமல்லாமல் கடுமையாக விமர்சித்திருந்தனர்.

Related Articles

Related image1
முதல்வர் பதவியே கொடுத்தாலும் கூட்டணி இல்லை.. தனித்து தான் போட்டி..! களத்தை அதிரவிடும் தவெக
Related image2
ஓயாமல் அடிச்சு ஊத்தப்போகும் மழை.. என்ன காரணம்? தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன குளு குளு அப்டேட்
35
கிட்னி விற்பனை மோசடியில் ஜூலி
Image Credit : Asianet News

கிட்னி விற்பனை மோசடியில் ஜூலி

அதுமட்டுமல்லாமல் கிட்னி விற்பனை மோசடியில் செவிலியராக பணியாற்றிய நடிகை ஜூலிக்கு தொடர்பு இருப்பதாக கூறி ஆதாரங்கள் இருப்பதாக கூறி வீடியோக்கள் வெளியானது. இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தனக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்கள் மற்றும் பொய்யான செய்திகளை பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஜூலி பரபரப்பு புகார் அளித்தார். மேலும் தனது திருமண வாழ்க்கை குறித்தும் அவதூறு பரப்புவதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

45
பாஜகவை எதிர்ப்பது தமிழ்நாடு
Image Credit : Asianet News

பாஜகவை எதிர்ப்பது தமிழ்நாடு

இந்நிலையில் ஜூலி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வணக்கம் மக்களே. எம்ப்ட்டி சிலிண்டர் எல்லாம் வாங்கி வைத்துவிட்டீர்களா?.. மோடி இதிலும் நம் வயிற்றில் அடிக்காமல் இருந்தால் ரொம்பவே சந்தோஷம். ஆனால் இது பற்றி எல்லாம் நம் அண்ணன் பேச மாட்டார். அண்ணன் இங்கு பேசினால் ஜி சொல்லி சிபிஐ வந்து குடுமியை பிடித்து ஆட்டி வைத்துவிடும். அதனால் அவர் பேச மாட்டார். இப்ப வரைக்கும் பாஜகவுடன் சேர்கிறோமா இல்லையா என்று நிறைய பேச்சு இருக்கிறது. நானே சொல்கிறேன் அவங்க சேர மாட்டாங்கனு. ஏனெனில் பாஜகவை எதிர்ப்பது தமிழ்நாடு. பாஜகவுக்கு எதிரானவர்கள் நாங்கள் என்பதை அவர்கள் செட் செய்வார்கள். கொள்கை எதிரியோடு சேரவில்லை. நாங்கள் பாஜகவுக்கு எதிரானவர்கள்னு சொல்லி தானே ஓட்டு வாங்க முடியும். அதற்காக அவர்கள் செய்யக்கூடிய ஜோக்தான் இது. மக்களே இதை நம்பி யாரும் ஏமாற வேண்டும்.

55
உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கவும்
Image Credit : X

உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கவும்

மறக்காமல் ஏப்ரல் 23ம் தேதி உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கவும். நம் பேஸ்கட் பால் அண்ணா தனி விமானத்தில் மது பாட்டில் எடுத்துச் சென்று மாட்டிக்கொண்டதாக சொல்கிறார். எதற்கு அண்ணா இது? கட்சிக்கு அசிங்கம் இல்லையா. சட்டம் தன் கடமையை செய்யும். தீ பரவட்டும்.. வழக்கம் போல வல்கர் வாரியர்ஸ், அவதூறு வாரியர்ஸ் வந்து வன்மத்தை கக்கிட்டு போகலாம். தவெகதான் பாஜக. பாஜகதான் தவெக. விஜய் பாஜகவின் பி டீம் எல்லாம் இல்லை, ஏ டீமே அண்ணன் தான் என்றார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டிவி.கே. விஜய்
சினிமா
அரசியல்
தமிழ்நாடு
பிஜேபி
Latest Videos
Recommended Stories
Recommended image1
சென்னை விமான நிலையத்தில் பெரிய மாற்றம்! ஒரு கேட் மட்டும் – பயணிகளுக்கு சிக்கல்
Recommended image2
முதல்வர் பதவியே கொடுத்தாலும் கூட்டணி இல்லை.. தனித்து தான் போட்டி..! களத்தை அதிரவிடும் தவெக
Recommended image3
ஓயாமல் அடிச்சு ஊத்தப்போகும் மழை.. என்ன காரணம்? தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன குளு குளு அப்டேட்
Related Stories
Recommended image1
முதல்வர் பதவியே கொடுத்தாலும் கூட்டணி இல்லை.. தனித்து தான் போட்டி..! களத்தை அதிரவிடும் தவெக
Recommended image2
ஓயாமல் அடிச்சு ஊத்தப்போகும் மழை.. என்ன காரணம்? தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன குளு குளு அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved