Pratap Pothen Death : மறைந்த நடிகர் பிரதாப் போத்தனின் உடலுக்கு கமல்ஹாசன், இயக்குனர் மணிரத்னம், ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம், ராஜிவ் மேனன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் வெற்றிகரமான இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வந்தவர் பிரதாப் போத்தன். பல்வேறு ஹிட் படங்களில் நாயகனாக நடித்துள்ள இவர், சமீபகாலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். இவர் நடிப்பில் கடைசியாக வந்த படம் பொன்மகள் வந்தாள். ஜோதிகா நடிப்பில் வெளியான இப்படத்தில் வக்கீலாக நடித்து அசத்தி இருந்தார்.

உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு கடந்த சில நாட்களாக சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள தனது வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்த பிரதாப் போத்தன் இன்று காலை காலமானார். தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... இறப்பதற்கு முன்பே மரணம் குறித்தும்... வாழ்க்கையின் தத்துவத்தையும் முகநூல் பதிவில் கூறிய பிரதாப் போத்தன்!

அந்த வகையில் நடிகை குஷ்பு டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது : “பிரதாப் போத்தன் மரணச் செய்தி கேட்டு மனமுடைந்தேன். ஒரு நல்ல அற்புதமான மனிதரை, சிறந்த தொழில்நுட்ப கலைஞரை, நடிகரை, வேடிக்கையான மனிதரையும் இழந்திருக்கிறேன். அவரோடு சில படங்களில் பணியாற்றும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. உங்களை மிகவும் மிஸ் செய்கிறேன்.

இதையும் படியுங்கள்... நடிகை ராதிகாவை ஆசை ஆசையாய் காதலித்து திருமணம் செய்த பிரதாப் போத்தன்... ஒரே ஆண்டில் விவாகரத்து செய்தது ஏன்?

Scroll to load tweet…

எனது தயாரிப்பில் தயாராகி உள்ள காஃபி வித் காதல் படத்தில் நீங்கள் பணியாற்றி இருக்கிறார். அதன் ஷூட்டிங் ஊட்டியில் நடைபெற்றபோது அவரை பார்த்தேன். அன்று பார்த்த அதே புன்னகையோடு இருந்தார். எப்போது சிரித்த முகத்தோடு இருப்பார். என்றும் மாறாத மனிதர் பிரதாப் போத்தன்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் குஷ்பு.

Scroll to load tweet…

அதேபோல் நடிகர் சத்யராஜ் வீடியோ வாயிலாக தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “என்னுடைய ஆருயிர் நண்பன், மிகச்சிறந்த இயக்குனர், அற்புதமான நடிகர் பிரதாப் போத்தனின் மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவரைப் பிரிந்து வாழும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், கலைத்துறையினருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்... 15 வயதில் தந்தையை இழந்த பிரதாப் போத்தன்... சினிமாவிற்குள் வந்தது எப்படி?

இதுதவிர நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் மணிரத்னம், ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம், ராஜிவ் மேனன் ஆகியோர் நடிகர் பிரதாப் போத்தனின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.