நாட்டை விட்டு வெளியேற மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சேவுக்கு தடை... இலங்கை உச்சநீதிமன்றம் அதிரடி!!

மகிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேற இலங்கை உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

mahinda rajapakse and basil rajapakse banned from leaving the country says srilanka sc

மகிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேற இலங்கை உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ராஜபக்சே குடும்பத்தினரின் தவறான கொள்கை முடிவுகளால் இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து இலங்கையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அது கலவரமாக மாறியது. இதனிடையே அதிபர் பதவியில் இருந்து கோட்டபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் மக்கள் போராட்டம் வலுத்ததை அடுத்து கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறினர்.

இதையும் படிங்க: இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவிஏற்றார்

mahinda rajapakse and basil rajapakse banned from leaving the country says srilanka sc

முதலில் மாலத்தீவிற்கு சென்ற அவர் அங்கிருந்து சிங்கப்பூருக்கு குடும்பத்துடன் தப்பி சென்றார். சிங்கப்பூரில் இருந்து துபாய் செல்ல திட்டமிட்டுள்ள அவர், அரசியல் அகதியாக அந்த நாட்டில் தஞ்சமடைய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.   இந்த நிலையில் மகிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேற இலங்கை உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. முன்னதாக மகிந்த ராஜபக்சே கடந்த மே மாதம் 9 ஆம் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அவர் நாட்டை விட்டு வெளியேறக்கூடும் என பரவலாக செய்திகள் வெளியாகின.

இதையும் படிங்க: கோத்தபய ராஜபக்சே ராஜினாமாவை அறிவித்தார் சபாநாயகர்; 7 நாட்களில் புதிய அதிபர்!!

mahinda rajapakse and basil rajapakse banned from leaving the country says srilanka sc

எனினும், மகிந்த ராஜபக்சே இலங்கையில் தான் தற்போது உள்ளார். அதேபோல், நிதி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்சேவும் இலங்கையில் இருக்கும் நிலையில், இருவரும் நாட்டை விட்டு வெளியேற வாய்ப்பு உள்ளதாக இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த இலங்கை உச்சநீதிமன்றம், மகிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே வரும் 28 ஆம் தேதி வரை நீதிமன்ற அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. அண்மையில் இலங்கை அதிபர் பொறுப்பில் இருந்து விலகிய கோத்தபய ராஜபக்சே, இலங்கையை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் இருக்கும் நிலையில், மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios