2 குழந்தைகள் கவலைக்கிடம்... வேலூர் பெண் டாக்டரின் அட்ராசிட்டி அதிர்ச்சி வீடியோ!

வேலூர் தனியார் மருத்துவமனையில் மருத்துவரின் அலட்சியத்தால் 2 குழந்தைகள் கவலைக்கிடமாக உள்ளது.

First Published Sep 30, 2018, 11:24 AM IST | Last Updated Sep 30, 2018, 11:53 AM IST

வேலூர் தனியார் மருத்துவமனையில் மருத்துவரின் அலட்சியத்தால் 2 குழந்தைகள் கவலைக்கிடமாக உள்ளது. அதில் உள்ளூர் இன்ஸ்பெக்டர் புகழேந்தி பாதி்க்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இல்லாமல் முறைகேடான மருத்துவமனையுடன் டீலில் உள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர் பாதிக்கப்பட்ட உறவினர்கள்.

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் சந்தியா மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதில் சித்தூரை சேர்ந்த உமாபதி என்பவரது மகள் ரெட்டிமோனிஷா என்பவர் கடந்த ஓராண்டாக கிச்சை பெற்று வந்தார். இவருக்கு ஐ.வி.எப். முறையில் கருத்தரிப்பு செய்யப்பட்டது. இதில் 3 குழந்தைகள் கருவுருவானது சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் ஊசிமூலமாக ஒரு கருவை கருகலைப்பு செய்தனர். 

இதனையடுத்து 7 மாதத்திலேயே குறை பிரசவமாகி இரண்டு குழந்தைகளும் பிறந்தது. ஆனால் அந்த மருத்துமனையில் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை. ஆகையால் இந்த குறை பிரசவ குழந்தைகளை இன் கியூபேட்டார் வசதியில்லாததால் சந்தியா மருத்துவமனை சாதாரண ஆம்புலன்ஸ் மூலம் குழந்தைகளை சென்னைக்கு அனுப்பியுள்ளனர். 

3 மணி நேரம் குழந்தைகள் எந்த விதமான மருத்துவ உபகரணங்களுமில்லாததால் நோய்தொற்று ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் தாய்க்கும் ரத்த போக்கு அதிகம் ஏற்பட்டுள்ளது. சந்தியா மருத்துவமனையிலிருந்து அவர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்ற முயற்சித்துள்ளனர். 

இதனால் அவரின் உறவினர்கள் மருத்துவமனையின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவர்களை சமாதனப்படுத்தினர். பிறகு பாதிக்கப்பட்டவர்கள் ஆதராக இல்லாமல் உள்ளூர் இன்ஸ்பெக்டர் புகழேந்தி மருத்துவமனைக்கு ஆதரவாக பேசிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.