08:21 PM (IST) Jul 31

அச்சச்சோ... விபத்தில் சிக்கிய குக் வித் கோமாளி பவித்ரா..! என்ன ஆச்சு? அதிர்ச்சி தகவல்..!

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பவித்ரா லட்சுமி தற்போது சிறு விபத்தில் சிக்கி அதில் இருந்து... மெல்ல மெல்ல மீண்டு வருவதாக போட்டுள்ள பதிவு, ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும் படிக்க 

07:52 PM (IST) Jul 31

பெண் கல்வி தடைபடக் கூடாது: கொளத்தூர் முதல்வர் பேச்சு

பெண்களின் கல்வி எந்தக் காரணத்தை முன்னிட்டும் தடைபடக் கூடாது என்பதற்காக பார்த்துப் பார்த்து திட்டங்களைத் தீட்டிவருவதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி உரையாற்றினார்.

07:36 PM (IST) Jul 31

ஜிஎஸ்டி வழக்குகளில் ரூ.76,000 கோடி மீட்பு: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், 2020 முதல் 43,000 க்கும் மேற்பட்ட ஜிஎஸ்டி ஏய்ப்பு வழக்குகள் நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் 76,000 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு தொடர்பாக மொத்தம் 2,784 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.5,716 கோடி மீட்கப்பட்டுள்ளதாகவும், ஜிஎஸ்டி ஏய்ப்பின் கீழ் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுஇருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

04:17 PM (IST) Jul 31

நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில்: ஆக.,6ஆம் தேதி தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

சென்னை - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் சேவையை வருகின்ற ஆகஸ்ட் 6ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கவுள்ளார்

03:49 PM (IST) Jul 31

மூத்த காங்கிரஸ் தலைவர் வக்கோம் புருஷோத்தமன் காலமானார்!

மூத்த காங்கிரஸ் தலைவரும், மிசோரம் முன்னாள் ஆளுநருமான வக்கோம் புருஷோத்தமன் காலமானார்

03:01 PM (IST) Jul 31

Special trains : ஓணம் & வேளாங்கண்ணி பண்டிகைகளை முன்னிட்டு.. சிறப்பு ரயில்கள் இயக்கம் - முழு விபரம் இதோ !!

ஓணம் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ரயில்கள் மேற்கண்ட பண்டிகைக்கான சிறப்புக் கட்டண சிறப்புகளுக்கான முன்பதிவு ஜூலை 30ஆம் தேதி காலை 8.00 மணிக்கு திறக்கப்படும்.ஓணம் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ரயில்கள் மேற்கண்ட பண்டிகைக்கான சிறப்புக் கட்டண சிறப்புகளுக்கான முன்பதிவு ஜூலை 30ஆம் தேதி காலை 8.00 மணிக்கு திறக்கப்படும்.

02:45 PM (IST) Jul 31

Foxconn : 6000 பேருக்கு வேலை ரெடி.. காஞ்சிபுரத்தில் ரூ.1600 கோடியில் புதிய ஃபாக்ஸ்கான் ஆலை !!

ஃபாக்ஸ்கான், உதிரிபாக உற்பத்திக்காக தமிழகத்தில் ரூ.1,600 கோடி முதலீடு செய்யவுள்ளது.

02:01 PM (IST) Jul 31

புதுவையில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி கைது; கடைகள் அடைப்பு

புதுச்சேரியில் பெரிய மார்க்கெட்டை இடித்துவிட்டு புதிதாக கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்பட கூட்டணிக்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்டனர்.

12:58 PM (IST) Jul 31

WhatsApp : இனிமே எல்லாமே மாறப்போகுது.. வாட்ஸ்அப் வெளியிட்ட அசத்தல் அப்டேட் - முழு விபரம்

சாட்டிங் போது நேரடியாக குழுக்களில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க வாட்ஸ்அப் அனுமதிக்கிறது. அதனைப் பற்றி முழுமையாக காணலாம்.

12:39 PM (IST) Jul 31

Kerala : திருமணம் ஆகி 1 மாசம் கூட ஆகல.. பாறையில் நின்று செல்பி எடுத்த தம்பதி - 3 உயிரை பறித்த சோகம்

கேரளா திருவனந்தபுரம் அருகே செல்ஃபி எடுக்கும்போது புதுமணத் தம்பதிகள் ஆற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

12:15 PM (IST) Jul 31

மோடி மீண்டும் பிரதமராவார்: ஜோசியம் சொன்ன லாலாசாப்!

கர்நாடக மாநிலம் ஹெப்பாளி தர்காவில் ஒவ்வொரு வருடமும் தீர்க்கதரிசனம் சொல்லும் லாலாசாப், மோடி மீண்டும் பிரதமராவார் என கணித்துள்ளார்

12:08 PM (IST) Jul 31

Subway : இதை மட்டும் செய்யுங்க.. வாழ்நாள் முழுவதும் உணவு இலவசம் - பிரபல சாண்ட்விச் நிறுவனமான சப்வே அதிரடி

பிரபல சாண்ட்விச் நிறுவனமான சப்வே சாண்ட்விச்களை வாழ்நாள் முழுவதும் இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

11:42 AM (IST) Jul 31

வீட்டிற்கு லேட்டாக வந்த மகளை கண்டித்த தந்தை.. கோபத்தில் கொலை செய்த மகள் - அதிர்ச்சி சம்பவம்

வீட்டிற்கு தாமதமாக வந்ததற்காக திட்டியதால் தந்தையின் கழுத்தை அறுத்துள்ளார் மகள். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.

11:14 AM (IST) Jul 31

வருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்: போர்டல் வேலை செய்யவில்லையா? என்ன செய்ய வேண்டும்?

வருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த துறையின் போர்டல் வேலை செய்யவில்லை எனில் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான தீர்வு அளிக்கப்பட்டுள்ளது

11:06 AM (IST) Jul 31

Today Gold Rate in Chennai : தங்கம் வாங்க சரியான நேரம் இது.. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம் என்ன?

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

10:44 AM (IST) Jul 31

இந்தியாவின் செமிகண்டக்டர் திட்டம்: மேக் இன் இந்தியாவுக்கான முயற்சி - ஜெய்சங்கர்!

இந்தியாவின் செமிகண்டக்டர் திட்டம் மேக் இன் இந்தியா லட்சியத்தை அடைவதற்கான முயற்சி என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்

10:44 AM (IST) Jul 31

புத்ததேவ் பட்டாச்சார்யா உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்!

மேற்குவங்க மாநில முன்னாள் முதல்வரும், மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்யா உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

09:15 AM (IST) Jul 31

TN Rain Alert : குடையை மறக்காதீங்க மக்களே.. 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை - முழு விபரம் !!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னைவானிலை மையம் தெரிவித்துள்ளது.

09:02 AM (IST) Jul 31

உல்லாசத்துக்கு அழைத்த தம்பி மகன்.. இணங்க மறுத்த அத்தையை போட்டுத்தள்ளிய சம்பவம் - சென்னையில் அதிர்ச்சி

சென்னை கொடுங்கையூரில் வீட்டில் பெண் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

08:55 AM (IST) Jul 31

ரசிகர்களின் மனம்கவர்ந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி இந்த சீசனோடு நிறுத்தப்படுகிறதா..! வெளியான அதிர்ச்சி தகவல்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான குக் வித் கோமாளி நிகழ்ச்சி 4-வது சீசனோடு முடிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.