இந்தியாவின் செமிகண்டக்டர் திட்டம்: மேக் இன் இந்தியாவுக்கான முயற்சி - ஜெய்சங்கர்!

இந்தியாவின் செமிகண்டக்டர் திட்டம் மேக் இன் இந்தியா லட்சியத்தை அடைவதற்கான முயற்சி என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்

India semiconductor programme is a larger endeavour to promote make in india says jaishankar

செமிகான் இந்தியா 2023 மாநாடு குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாள் மாநாட்டில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மாற்றியமைக்கப்பட்ட செமிகான் இந்தியா திட்டம் என்பது, 'மேக் இன் இந்தியா' முயற்சியின் ஒரு பகுதியாகவும், 'ஆத்மநிர்பர் பாரத்' திட்டத்தின் ஒரு பகுதியாகவும், இந்தியாவில் உற்பத்தியை ஊக்குவிக்கும் முயற்சி என குறிப்பிட்டார்.

நாட்டின் மூலோபாய பார்வை மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் ஒரு முக்கிய பங்கைப் பெறுவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளை இந்தியா எடுத்து வருவதை அமைச்சர் எடுத்துரைத்தார்.

இந்தியாவின் இலக்கு குறித்து பேசிய ஜெய்நங்கர், “நாட்டில் படிப்படியாக விரிவடைந்து வரும் மின்னணு தயாரிப்புகளின் உற்பத்தியை நீங்கள் நன்கு அறிந்திருக்கிறீர்கள். ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இருந்து தற்போது மூன்றாவது பெரிய பொருளாதாரத்திற்கு இந்தியா மேற்கொண்ட பயணத்தின் இயல்பான விளைவு இது. இதுவே எங்களின் தற்போதைய இலக்கு. இந்த உற்பத்தி அம்சத்தை விரிவுபடுத்துவதில் எங்களின் வலுவான ஆர்வம், மாற்றியமைக்கப்பட்ட செமிகான் இந்தியா திட்டத்தில் பிரதிபலிக்கிறது. இது இந்தியாவில் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான ஒரு பெரிய முயற்சியின் ஒரு அம்சமாகும்.” என்றார்.

இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பின் வளர்ச்சிக்காக செமிகான் இந்தியா திட்டத்தை டிசம்பர் 2021 இல் மத்திய அரசு தொடங்கியது.

“அதிக தன்னம்பிக்கை கொண்ட இந்தியா, செமிகண்டக்டர் உற்பத்தியில் மேலும் தன்னிறைவு பெறும். அதேபோன்று, தனது ஏற்றுமதியின் தரம் மற்றும் அளவு இரண்டையும் மேம்படுத்துவதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும்.” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி..? தமிழகத்தில் பாஜகவிற்கு எத்தனை இடங்கள்- வெளியான கருத்து கணிப்பு முடிவு

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான ஒத்துழைப்பு குறித்தும் அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். அமெரிக்க வர்த்தக செயலாளர் ஜினா ரைமண்டோவின் இந்தியப் பயணத்தை நினைவு கூர்ந்த அவர், செமிகண்டக்டர் விநியோக சங்கிலியில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்தும் குறிப்பிட்டார். பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின் போது மைக்ரோ டெக்னாலஜி, லாம் ரிசர்ச் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் நிறுவனங்களுடன் போடப்பட்ட ஒப்பந்தம் குறித்தும் அவர் பேசினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், “பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்தின் போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடனான் பேச்சுவார்த்தைகளில் செமிகண்டக்டரே முக்கியமாக இடம்பெற்றன. இதுதொடர்பான கூட்டு அறிக்கை எங்களின் ஒத்துழைப்பின் இந்த அம்சத்தை எடுத்துக்காட்டியது. இந்த முன்னேற்றங்களை இந்தியாவும் அமெரிக்காவும் எதிர்காலத்திற்கான தொழில்நுட்ப கூட்டாண்மையை உருவாக்குவதற்கான பெரிய கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டியது அவசியம்.” என்றார்.

உலக அரங்கில் இந்தியாவின் நிலையை உயர்த்துவதில் முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் முக்கியத்துவத்தை அமைச்சர் ஜெய்சங்கர் கோடிட்டுக் காட்டினார். இது அறிவுப் பொருளாதாரத்தின் உள்ளார்ந்த அம்சமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

சிப் போர் என்பது ஓரளவு மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என தெரிவித்த அவர், ஆனாலும் ஆதற்கான தேவை அதிகமாகவே உள்ளது என்றார். “தொழில்நுட்ப வர்த்தகம் என்பது வெறும் வர்த்தகம் அல்ல; அது அரசியல் அறிவியலைப் போன்றது. வியாபாரம் செய்வது என்பது நிதானமாக இருக்க வேண்டும். எங்கே, யாருடன் அதைச் செய்ய வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.” என்றும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios